பகல்முனி உரைத்தல்(கைக்கிளை)
பகல்முனி உரைத்தல் புறப்பொருளில் அமைந்த கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. தலைவனைக் கண்டு காதல் கொண்ட பெண் பகல் பொழுதை வெறுப்பதைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வளையல்கள் நெகிழத் தனிமையில் இருக்கும் தலைவி, துயர் மிகுந்து பகல் பொழுதை வெறுத்தமையைச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புரிவளை நெகிழப் புலம்பொடு நின்றோள்
பருவரல் உள்ளமொடு பகல்முனி உரைத்தன்று(கொளு 15.7 )
வெண்பா
தன்கண் அளியவாய் நின்றேற்குத் தார் விடலை
வன்கண் நல்கான் என வாடும் - என்கண்
இடரினும் பெரிதால் எவ்வம்
படரினும் பெரிதால் பாவி இப் பகலே (300)
பொருள்: அவன் அருளை வேண்டினேன்; அவன் அருளவில்லை; இந்த வருத்தத்தைவிட மானம் பெரிதென்று வாளா இருக்கிறேன். என்னுடைய நிலையை அழிக்கும் ஆற்றலுடையதாக இருக்கிறது இப்பகல்பொழுது.
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2025, 18:43:00 IST