under review

நயத்தல்(கைக்கிளை)

From Tamil Wiki
Revision as of 03:44, 22 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நயத்தல் புறப்பொருளில் அமைந்த கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெண்ணொருத்தி தலைவனைக் கண்டு விரும்புவதைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் திண்ணிய தோள்களையுடைய தலைவனைக் கண்ட நல்ல நெற்றியினைக் கொண்ட பெண்ணின் ஆசையைச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கல்நவில் திண்தோள் காளையைக் கண்ட
நல்நுதல் அரிவை நயப்பு உரைத்தன்று(கொளு 15.2)
 

வெண்பா

கல் நவில் தோளானைக் காண்டலும் கார்க்குவளை
அன்ன என் கண்ணுக்கு அமுதமாம் - என்னை
மலை மலிந் தன்ன மார்பம்
முலைமலிந்து ஊழ்ஊழ் முயங்கும் காலே (295)

பொருள்: மலையைஒத்த தோள்களை உடையவனைக் கண்டேன்; என் கண்ணுக்கு அவன் அழகு அமுதமாக இனிக்கிறது. அவன் தோள்கள் என் மார்புகளைத் தழுவினால் எப்படி இருக்கும்?

உசாத்துணை

கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 19:00:37 IST