under review

பின் தேர்க்குரவை(வாகைத்திணை)

From Tamil Wiki
Revision as of 03:44, 11 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பின் தேர்க்குரவை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வென்று வாகை சூடிய மன்னனின் தேரின் பின் குரவையாடுதல் என்பது இதன் பொருள்.

தும்பைத் திணையிலும் பின்தேர்க் குரவை இடம் பெற்றுள்ளது.

தும்பையின் முன்தேர்க் குரவையும் பின்தேர்க் குரவையும் போர்க்குச் செல்லுகின்ற தேரின்மேல். வாகைத்திணையில் இவை வென்று நின்ற மன்னனின் தேரின் முன்னும் பின்னும் நடப்பது.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வீரக்கழலை அணிந்த மன்னனது தேரின் பின், வளையல்கள் அணிந்த விறலியர் வீரரொடு ஆடுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கருங்கழல் மறவரொட வெள்வளை விறலியர்
பெருந்தகை தேரின் பின் ஆடின்று(கொளு 7.18)

வெண்பா

கிளை ஆய்ந்து பண்ணிய கேள்வி யாழ் பாணும்
வளையா வயவரும் பின்னாக் - கொளை ஆயந்து
அசை விளங்கும் பாடலொடு ஆட வருமெ
திசை விளங்கும் தானையான் தேர் (144)

பொருள்: வெற்றியினையுடைய வீரரும், அழகிய மொழியினை உடையாரான பாணிச்சியரும், வெவ்விய போரினிடத்தே, குன்றினை நிகர்த்த இளங்களிறும் கூந்தலையுடைய இளம் பிடியினையும் போல, பொய்யாத செங்கோலை உடையவனான தம் அரசனை வாழ்த்தி, அவனது தேரின்பின்னர்க் குரவைக் கூத்தினைக் கைகோத்து ஆடும் கோப்பைக் கொண்டு, கூத்தாடி நின்றனர்.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2025, 10:49:00 IST