second review completed

பல்லவி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 07:12, 5 July 2025 by SakthivelS (talk | contribs)
பல்லவி (நன்றி:சிற்றிதழ் உலகம்)

பல்லவி (1986 - 1987) சீர்காழியை சேர்ந்த எஸ்.குமாரின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த கலை இலக்கியச் சிற்றிதழ்.

வரலாறு

பல்லவி இதழ் சீர்காழியை சேர்ந்த எஸ்.குமாரை ஆசிரியராகவும் முல்லை நாதன், மாவே. ரவிசந்திரன், ஆர்.எஸ். ராஜ் ஆகியோரைத் துணை ஆசிரியர்களாகவும் கொண்டு 1986-ம் ஆண்டு முதல் மாத இதழாக வெளிவர தொடங்கியது. தாஜ், நாகூர் ரூமி, சாதிக், தேவகி ராமலிங்கம், வெங்கடேச பாரதி, தேவகி, சுந்தரராஜன், சாரதா நாகரத்தினம், ராமலிங்கம் ஆகிய எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் உதவியுடன் பல்லவி இதழ் வெளியானது.

பல்லவி இதழ் தொடக்கத்தில் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவிதை இதழாக 7 மாதங்கள் வெளிவந்தது. பின்னர் காலாண்டிதழாக மாற்றம் பெற்று சிறுகதைகள், கட்டுரைகளைக் கொண்டு வெளிவந்தது. காலண்டிதழாக மாறிய பின் 4 இதழ்கள் வெளிவந்தபின் பல்லவி இதழ் நின்றுபோனது.

உள்ளடக்கம்

பல்லவி இதழில் கவிதைகள், சிறுகதைகள், இலக்கிய விமர்சன கட்டுரைகள், மொழிப்பெயர்ப்பு கவிதைகள், விளையாட்டு செய்திகள் மற்றும் இதர செய்திகளும் வெளியாயின. பல்லவி இதழின் கவிதைகள் பகுதியில் மு.மேத்தா, விக்ரமாதித்யன், குறள் பித்தன் போன்ற அறியப்பட்ட கவிஞர்களின் கவிதைகளும் பட்டுக்கோட்டை ராஜா, இராஜேசு, இரவி, முல்லை மணிவண்ணன், ஞானாம்பாள், இராசி, பன்னீர் செல்வம், அறந்தாங்கி சங்கர், கோவை. பிரபாகரன், சுகா பிரேம்குமார், கோ.வை.வாசன், முகம்மது பாருக், எஸ்.ஆர்.சுவாமி, எஸ்.குமார், எஸ்.ராகவேந்திரன் ஆகியோரின் கவிதைகளும் வெளியாயின.

பல்லவி இதழ் காலண்டிதழாக மாற்றம் பெற்ற பின், சிறுகதைகளையும் கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கியது. டி.எஸ்.வி.அசோகன், எஸ்.குமார் போன்றோரின் சிறுகதைகளும் ஜப்பானியப் பெண் படைப்பாளி யூக்கோ ஸுசீமா குறித்த குறிஞ்சி வேலனின் கட்டுரையும் 'மொழி' என்ற தலைப்பில் குறிஞ்சி ஞான வைத்தியநாதனின் கட்டுரையும் எனப் பல படைப்பாளிகளின் கட்டுரைகள் வெளியாயின. தாஜ் எழுதிய 'புரிந்து கொள்வீர் புதுக்கவிதைகளை' என்ற கட்டுரைத் தொடரும் வெளியானது. கவிதையிதழாக மட்டும் வெளிவந்து கொண்டிருந்த முதல் ஏழு இதழ்களில் உலகப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் குறிஞ்சி வேலனின் 'இலக்கிய உலகிலே இவர்கள்' என்ற கட்டுரை தொடர் வெளியாகியுள்ளது.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.