under review

கொற்றவுழிஞை

From Tamil Wiki
Revision as of 03:44, 4 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கொற்றவுழிஞை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. உழிஞை வேந்தன் பகைவரது அரணைக் கைப்பற்ற படையோடு செல்வது பற்றிக் கூறுவது கொற்றவுழிஞை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தன்னைப் பணிந்து வந்து சேராத பகைமன்னனது அரணினைக் கைக்கொள்வதன் பொருட்டாக, உழிஞை மன்னன் தனது படையோடு சென்றது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

அடையாதார் அரண் கொள்ளிய
படையோடு பரந்தெழுந்தன்று(கொளு 6.5)

வெண்பா

வெள்வாள் கருங்கழல்கால் வெஞ்சுடர்வேல் தண்ணளியான்
கொள்வான் கொடித்தானை கொண்டு எழந்தான் - நள்ளாதார்
அஞ்சுவரு வாயில் அரும் இளைக் குண்டு அகழி
மஞ்சு இவரும் ஞாயில் மதில் (99)

பொருள்: வாள், வேல் ஆகியவற்றோடு அருளையும் உடைய உழிஞை மன்னன், புகுதற்கு அரிய காவல் காடு, ஆழம் உடைய அகழி ஆகியவற்றைக் கொண்ட பகைவர்களது அரணைக் கைப்பற்றுவதன் பொருட்டு, தனது படையைக் கொண்டு வந்தான்

உசாத்துணை

உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jul-2025, 10:35:22 IST