under review

களிற்றுடன் நிலை

From Tamil Wiki
Revision as of 03:44, 27 June 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

களிற்றுடன் நிலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று.களிறு இறந்து விழ அதனுடன் வீரனும் இறத்தல் களிற்றுடன் நிலை.

விளக்கம்

இத்துறை தொல்காப்பியத்தில் களிறெதிர்ந்தோர் பாடு (பெருமை) என உள்ளது.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஒளிமிக்க வேல் பாய வீழ்ந்த யானையின் கீழ்ப்பட்டு வீரன் இறத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

ஒளிற்று எ·கம் பட வீழ்ந்த
களிற்றின் கீழ்க் கண் படுத்தன்று(கொளு 7.20)
 

வெண்பா

இறுவரை வீழ வியக்கற்று அவிந்த
தறுகண் தகைஅரிமாப் போன்றான் - சிறுகண்
பெருங்கைக் களிறெறிந்து பின் அதன் கீழ்ப்பட்ட
கருங்கழல் செவ்வேலவன் (146)

பொருள்: வீரக்கழலையும் வேலையும் உடைய வீரன், பெருமலை வீழ, வேறு வழியின்றி அதன் கீழ் சிக்கி இறந்த சிங்கம் போன்று சிறிய கண்ணையும் பெரிய துதிக்கையையும் உடைய யானையை வலோல் எறிந்து அது வீழ அதன் கீழ்ப்பட்டு இறந்தான்.

உசாத்துணை

தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jun-2025, 18:41:10 IST