கல் நீர்ப்படுத்தல்
கல் நீர்ப்படுத்தல் பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. கல் நடும் இடத்திற்கு இறந்த வீரனுக்கான நடுகல்லைக் கொண்டுபோதலையும் அதை நீரில் இடுதலையும் குறிக்கிறது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் இரு கொளுப்பாடல்கள் கல் நீர்பாடுத்தலின் இலக்கணத்தைக் கூறுகின்றன.
கொளு-1
கண்டு தேர்ந்து, வண்டுகள் சூழும் மாலை சூட்டப்பட்ட நடுகல்லினை நீரில் இடுதல்
வண்டுசூழ் தாமம் புடையே அலம் வரச்
கண்டு கொண்ட மல்நீர்ப்படுத்தன்று (கொளு 10.10)
வெண்பா
காடு கனலக் கனலோன் சினம் சொரியக்
கூடிய வெம்மை குளிர் கொள்ளப் - பாடி
நயத்தக மண்ணி நறுவிரைகொண்டு ஆட்டி
கயத்தகத்து உய்த்திட்டார் கல் (249)
பொருள்: காடே எரியும் வண்ணம் கதிரவன் வெப்பத்தைப் பொழிதலால், அந்த வெப்பம் தணிய நறுமணப் பொருள்களால் மஞ்சனமாட்டி வாவியில் கல்லை இட்டனர்.
கொளு-1
கண்டு தேர்ந்து, வண்டுகள் சூழும் மாலை சூட்டப்பட்ட நடுகல்லினை நீரில் இடுதல்
ஓங்கியகல் உய்ந்து ஒழுக்கல்
ஆங்கு எண்ணினும் அத்துறை ஆகும்(கொளு 10.11)
வெண்பா
கணன் ஆர்ந்து உவப்பக் கடுங்கண் மறவர்
பிணன் ஆர்ந்து பேய் வழங்கு ஞாட்பின் - நிணன்ஆர்
விழுக்கினால் வேய்ந்த விறல் வேலார் கல்லை
ஒழுக்கினார் ஒன்றா ஒருவர் முன்(250)
பொருள் : பேய்கள் பிணத்தைத் தின்று திரியும் போர்க்களத்தில் நிணம் நிறையும் பகைவரது நெஞ்சின் தசையால் மூடின வெற்றி வேலைக் கைகொண்ட, வீர மரணம் அடைந்த மறவர்களுக்கு நடுவதற்குரித்தான கல்லினை மறவர்கள், ஒருவர் முன்பு ஒன்றாக முறையே நிரைத்தார்கள்.இறந்தோர் பீடும் பெயரும் எழுதிய கல்லினை மறவர்கள் வரிசையில் நின்று, ஒருவர்முன் ஒன்றாக நிறுத்தி, நடுவதற்கு முறைப்படுத்தினர்.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jun-2025, 10:59:11 IST