second review completed

இல்லாண் முல்லை(பொதுவியல் திணை)

From Tamil Wiki
Revision as of 09:11, 21 June 2025 by Jayashree (talk | contribs)

இல்லாண் முல்லை (இல்லாள் முல்லை) பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. பொதுவியல் திணையின் கணவன் மனைவி இருவரிடயே நிகழும் உறவைக் கூறும் முல்லை பொதுவியற்பால என்னும் பிரிவில் அடங்கும் துறை. போர்த்துறைகளில் இவை அடங்காததால் பொதுவியல் திணையில் கூறப்படுகின்றன.

இல்லாண் முல்லை, இல்லறத்தின், இல்லாளின் சிறப்பைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் காதல் கணவனைத் தொழுது, பலரும் புகழும் அவன் இல்லத்தில் மனைவி வாழும் சிறப்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கழுமிய காதல் கணவனைப் பழிச்சி
இழும் என் சீர்த்தி இல் மலிபு உரைத்தன்று (கொளு 13.5)

வெண்பா

கல் என் நிர் வேலிக் கணவன் கழல் வாழ்த்தி
ஒல்லும் வகையால் விருந்தோம்பி - செல்லும் தம்
இல்செல்வம் அன்றி இரந்தவர்க்கு ஈகல்லாப்
புன் செல்வம் பூவா புகழ் (279)

பொருள் : கல்லென்று முழங்கும் கடலினையே வேலியாக உடைய உலகில் கணவனின் திருவடிகளை வாழ்த்திச் செயற்பட்டு, விருந்தினரைப் பாதுகாத்துச் செல்லும் பெண்ணே வீட்டின் செல்வம்., புகழுக்குரியவள்

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.