second review completed

ஆர்(பொதுவியல் திணை)

From Tamil Wiki
Revision as of 09:12, 20 June 2025 by Jayashree (talk | contribs)

ஆர் பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று.பொதுவியல் மூவேந்தருக்குரிய அடையாளப் பூக்கள் சூடுதலைப் பற்றிக் கூறுகிறது. ஆர் என்பது ஆத்திப்பூவைக் குறிக்கும். சோழனுக்குரிய அடையாளப் பூவான ஆத்தியை போர்க்காலத்தில் சூடுதலைக் குறிப்பது ஆர்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பகைவரது கொடிய போரினை எதிர்கொள்ளும் சோழன் புனைந்த ஆத்தி மலரைப் புகழ்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

விறல்படை மன்னவன் வெஞ்சமம் காணின்
மறப்போர்ச் செழியன் மலைபூ உரைத்தன்று(கொளு 10.3)
 

வெண்பா

கொல்களிறு ஊர்வர் கொலைமலிவாள் மறவர்
வெல்கழல் வீக்குவர் வேல் இளையர் - மல்கும்
கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன்
அலங்கல் அமர் அழுவத்து ஆர் (242)

பொருள்: கொலைத்தொழில் சிறந்த வாள் வீரர்கள் கொல்யானையைச் செலுத்துவர்; வெல்லும் ஆற்றலை மிக்க வேல்வீரர் வீரக்கழலை அணிவர்; காவிரி நாடனான சோழன் ஆத்திமாலை சூடுவான்.

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.