being created

தானை நிலை.

From Tamil Wiki
Revision as of 01:36, 18 June 2025 by Jayashree (talk | contribs) (Created page with "தானை நிலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று.வீரம் மிக்க ஒருவனைப் போர்க்களத்தில் உள்ள அனைத்து வீரர்களும் பாராட்டுதல் தானை நிலை. ==விளக்கம்== ======புறப்பொருள் வெண்பாமாலை====== புறப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தானை நிலை தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று.வீரம் மிக்க ஒருவனைப் போர்க்களத்தில் உள்ள அனைத்து வீரர்களும் பாராட்டுதல் தானை நிலை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் போரிட்ட இருபடைகளும் வீரன் ஒருவனின் விரத்தைப் புகழ்ந்து போற்றுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

இருபடையும் மறம் பழிச்சப்
பொருகளத்துப் பொலிவு எய்தின்று(கொளு 7.22)
 

வெண்பா

நேரார் பகையின் நிலைமை நெடுந்தகை
ஓரான் உறைகழியான் ஒள்வாளும் - தேர் ஆர்க்கும்
வெம்பரிமா ஊர்ந்தார்க்கும் வெல் களிற்றின் மேலார்க்கும்
கம்பமா நின்றான் களத்து (148)

பொருள்: பகைவரது படை வலிமை பற்றிக் கவலை கொள்ளாது, தன் வாளையும் உறையிலிருந்து எடுக்காது, வாட்படை, குதிரைப் படை, யானைப் படை எனத் தம் படையினர் அனைவரையும் தாங்கித் தூண்போல நின்றான் என வீரன் ஒருவன் போற்றப்படுகிறான்

உசாத்துணை

தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.