under review

தேன்மழை

From Tamil Wiki
Revision as of 03:44, 16 June 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected year suffix text; ; Added info on Finalised date)
தேன்மழை

தேன்மழை (1965) சுரதா எழுதிய மரபுக்கவிதைகளின் தொகுப்பு. சுரதாவின் சிறந்த கவிதைநூல் இது என கருதப்படுகிறது.

எழுத்து, வெளியீடு

தேன்மழை கவிஞர் சுரதா எழுதிய மரபுக்கவிதைகளின் தொகுப்பு. முதற்பதிப்பு ஜனவரி 1965-ல். சென்னையைச் சேர்ந்த சேகர் பதிப்பகம் இதை வெளியிட்டது.

உள்ளடக்கம்

தேன்மழை நூலில் சுரதா எழுதிய மரபுக்கவிதைகள் உள்ளன. இந்நூல் இயற்கை எழில், வரலாற்று வாயில், சொல்விளக்கம், காரணப்பெயர்கள், மங்கையர் பூங்கா, அகத்துறை, நெய்த செய்திகள்,காவியக்கடிதங்கள், விழாத விழாக்கள், எப்போதும் இருப்பவர்கள், துன்பத்துறைமுகம், இசைவிருந்து, மொழிச்செல்வம், தேன்துளிகள், ஆராய்ச்சி ஆகிய பகுதிகளையும்; வன்னியவீரன் என்னும் குறுங்காவியத்தையும் உள்ளடக்கியது.

நடை

முப்பாலைத் தந்தான் பூத்து மூத்தவனான தேவன்.

அப்பாலோர் தேவன் வந்தான். அன்னவன் மணநூல் தந்தான்.

திப்புத்தோள் கருவூர்த் தேவன் திருவிசைப் பாக்கள் தந்தான்.

இப்போது நீரோர் தேவர் என்பதால் எதிர்பார்க்கின்றேன்.


நாராய னாவென் பார்க்கும் நமசிவா யாவென் பார்க்கும்

தீராத வினையைத் தீர்க்கும் தேவனே எனச்சொல் வார்க்கும்

ஊராரும் எங்கள் வீட்டில் உள்ளாரும் அடிமை, செய்யுள்

ஆராயும் பாவா ணர்க்கே அடிமைநான் என்றாள் ஈந்தாள்

விருதுகள்

தேன்மழை நூலுக்கு தமிழக அரசின் இலக்கிய விருது, 1995-ல் தஞ்சை தமிழ்ப்பல்கலையின் ராஜராஜன் விருது ஆகியவை கிடைத்தன

இலக்கிய இடம்

சுரதா மரபுக்கவிதைகளை மரபுசார்ந்த பார்வையுடனும், சமூக சீர்திருத்த நோக்குடனும் எழுதியவர். உவமைகளுக்காக புகழ்பெற்றவர். அவருடைய சிறந்த கவிதைகளின் தொகுதி இந்நூல் என்று மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jun-2025, 22:26:25 IST