being created

பாலவிநோதினி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 23:28, 5 May 2025 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாலவிநோதினி (இதழ்)

பாலவிநோதினி (பாலவிநோதினி அல்லது குழந்தைகளின் நண்பன்) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய சிறார்களுக்கான தமிழ் இதழ். இதன் ஆசிரியர் வரகவி. அ. சுப்பிரமணிய பாரதி.

வெளியீடு

பாலவிநோதினி அல்லது குழந்தைகளின் நண்பன், சென்னையிலிருந்து வெளிவந்த சிறார் இதழ். ஜனவரி 1919-ல் இவ்விதழ் தொடங்கப்பட்டது. 1933 வரை தொடர்ந்து வெளிவந்தது. இதழின் ஆசிரியர் வரகவி. அ. சுப்பிரமணிய பாரதி. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்ரமண்யம் அண்ட் கோ நிறுவனத்தினர் இவ்விதழை வெளியிட்டனர். 1925-ல் இதழை வெளியிடும் உரிமை வாவிள்ளா ராமசாமி சாஸ்திரிகளுக்கு அளிக்கப்பட்டது. என்றாலும் ஆசிரியராக அ. சுப்பிரமணிய பாரதியே தொடர்ந்தார்.

இதழின் நோக்கம்

பாலவிநோதினி தனது இதழின் நோக்கங்களாகப் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டது.

”இவ்விதழ் குழந்தைகள் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் படித்து எளிதில் உணர்ந்துகொள்ளக்கூடிய வகையில் வெகு சுலபமான வசன நடையில் அமையும். இதன்கண், குழந்தைகளுக்கான நீதிக்கதைகள், கட்டுக்கதைகள், புண்யக்கதைகள், யோகினிக்கதைகள், அபூர்வ சூழ்ச்சிகளை விளக்கக் கூடிய ஆச்சர்யக் கதைகள், விநோத விசித்திர சம்பாஷனா ரூபமான நாடகத் தொகுதிகள், ஹாஸ்யத் துணுக்குகள், பழமொழிகள், மனதிலே பதித்துவைத்துக் கொள்ளக்கூடிய நீதி வாக்கியங்கள், சுகாதார விளக்கங்கள் ஆகியன குழந்தைகளுக்கான உள்ளடக்கங்களாக அமையும்.”

இதழ் குறித்து ஆசிரியர் அ. சுப்பிரமணியபாரதி, “எலிமென்டரி பாடசாலை உபாத்தியாயர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகவும் உபயோகமானது; ஒவ்வொரு லைப்ரரியிலும் அவசியம் இருக்கத் தக்கது” என்று குறிப்பிட்டார்.

இதழ் அமைப்பு




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.