அருஞ்சொல்

From Tamil Wiki

அருஞ்சொல் தமிழ் இணையப்பத்திரிகை.

வரலாறு

2022இல் ’தி இந்து’ தமிழ்திசை நாளிதழிலிருந்து விலகி ’அருஞ்சொல்’ இணைய இதழை ஆரம்பித்தார்.

நோக்கம்

”அன்றாடம் என்னுடைய எழுத்துகளை இங்கே வாசிக்கலாம். கூடவே தமிழின் முக்கியமான ஆளுமைகளின் கருத்துகள், படைப்புகளையும் வாசிக்கலாம். அன்றாடம் ஒரு ‘தலையங்கம்’, ஒரு ‘சிறப்புக் கட்டுரை’ அல்லது ‘சிறப்புப் பேட்டி’, தளத்தில் வெளியாகும் படைப்புகளை முன்வைத்து வெளியாகும் வாசகர்கள் - ஆளுமைகளின் விமர்சனங்களைத் தாங்கி வரும் ‘இன்னொரு குரல்’… இப்படி மூன்று பதிவுகள் மட்டுமே வெளியாகும். தமிழில் நேரடிக் கட்டுரை ஒருநாள் என்றால், மொழிபெயர்ப்புக் கட்டுரை மறுநாள் என்கிற அளவுக்கு மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரவிருக்கிறோம். இந்தியாவின் முக்கியமான அறிவாளுமைகள், சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் அறிஞர்கள் பலரும் பங்களிக்கவிருக்கிறார்கள். மூன்று பதிவுகளுக்கு மேல் வெளியிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம். நுகர்வோர் இல்லை வாசகர்கள்; அவர்கள் மீது குப்பைகள்போல பதிவுகளைத் திணிக்கக் கூடாது என்ற எண்ணமே அடிப்படை. “அன்றாடம் அரை மணி நேரம் எங்கள் தளத்தில் செலவிடுங்கள்; உங்களுடைய மதிப்புமிக்க அறிவை மேலும் செறிவூட்டிக்கொள்ள உதவுகிறோம் என்ற உத்தரவாதத்தை நாங்கள் தருகிறோம்” என்பதே ‘அருஞ்சொல்’ முன்வைக்கும் வேண்டுகோள்.” என இதழ் ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கத்தை ஆசிரியர் சமஸ் குறிப்பிடுகிறார்.

பொறுப்பாசிரியர்

  • சமஸ்

பதிவு வகைகள்

  • தலையங்கம்
  • கட்டுரை (ஆரோக்கியம், அர்சியல், சட்டம், கலாச்சாரம், வரலாறு)
  • பேட்டி
  • புதையல்
  • தொடர்
  • இன்னொரு குரல்
  • காணொளி

இணைப்புகள்