மிளகு

From Tamil Wiki
Revision as of 10:18, 27 August 2022 by Jeyamohan (talk | contribs)
மிளகு

மிளகு: (2022) இரா.முருகன் எழுதிய நாவல். இது ஒரு பல அடுக்கு வரலாற்றுப்புனைவு.

எழுத்து, வெளியீடு

இரா.முருகன் இந்நாவலை சொல்வனம் இணைய இதழில் 2021-2022ல் தொடராக எழுதினார். பின்னர் 2022ல் சீரோ டிகிரி பதிப்பகம் இதை நூலாக வெளியிட்டது.

பின்னணி

இந்நாவல் கெருசப்பா என்னும் நாட்டை ஆட்சி செய்த சென்னபைரா தேவி என்னும் அரசியின் கதையைச் சொல்கிறர். 54 ஆண்டுகள் ஆட்சி செய்த சென்னபைரா தேவி இந்திய அரசியரில் நீண்டகாலம் அரசுப்பொறுப்பில் இருந்தவர். கெருசப்பா உத்தரகன்னட பகுதியில் ஷாராவதி ஆற்றங்கரையில் அமைந்த சிறிய நாடு. விஜயநகர ஆதிக்கத்தில் இருந்த இந்நாடு அப்பேரரசின் வீட்சிக்குப்பின் அவர்களுக்குக் கீழே மகாமண்டலேஸ்வரர்கள் என்னும் சிற்றரசர்களில் ஒருவரான சாளுவ வம்சத்து ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. 1550 ல் சென்னபைரா தேவி ஆட்சிக்கு வந்தார். சென்னபைரா தேவி மிளகு ஏற்றுமதியால் செல்வம் மிக்க ஆட்சியாளரானார். அந்த செல்வத்தால் அடைந்த படைபலத்தால் கோவாவிற்கு தெற்கே ஏறத்தாழ கோழிக்கோடு வரையிலான பகுதிகளை ஆட்சி செய்தார். அவருடைய கட்டுப்பாட்டில் பட்கல், ஹொன்னாவர், மிர்ஜான் போன்ற துறைமுகங்கள் இருந்தன. சென்னபைரா தேவி போர்ச்சுக்கல் வணிகர்களுடன் தொடர்ச்சியாகப் போரிட்டுக்கொண்டிருந்தார். 1559, 1570 ஆண்டுகளில் நடந்த போர்களில் அவர் போர்ச்சுக்கல் வணிகர்களை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதரவுடன் தோற்கடித்தார். சென்னபைரா தேவியை மிளகுராணி (Raina de Pimenta) என்று ஐரோப்பியப் பயணிகள் அழைத்தனர்.

கதைச்சுருக்கம்

இலக்கிய இடம்

மிளகு ஒரு சரித்திர நாவல். மிளகு time space continuum குறித்த ஒரு அறிவியல் நாவல் என்று இரா முருகன் சொல்கிறார்.

உசாத்துணை