முள்ளும் மலரும்
From Tamil Wiki
முள்ளும் மலரும் (1966) உமாசந்திரன் எழுதிய நாவல். கல்கி வெள்ளிவிழா நாவல்போட்டியில் பரிசு பெற்றது. திரைப்படமாகவும் வெளிவந்தது
எழுத்து வெளியீடு
உமாசந்திரன் வானொலியில் பணியாற்றிய காலத்தில் குந்தா அணைத் திட்டம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சென்று தங்கி, மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அவதானித்து எழுதிய ‘முள்ளும் மலரும்’ நாவல் கல்கி வெள்ளிவிழா பரிசுத் திட்டத்தில் முதல் பரிசு ரூ.10000/- பெற்றது. சி.ராஜகோபாலாச்சாரியார் அந்தப் பரிசை உமாசந்திரனுக்கு அளித்தார்.
ஆகஸ்ட் 7, 1966, அன்று கல்கி வெள்ளி விழா இதழில் ஆரம்பித்த ‘முள்ளும் மலரும்.’ தொடர், தொடர்ந்து 36 வாரங்கள் வெளியாகி ஏப்ரல் 9, 1967ம் இதழோடு முற்றுப்பெற்றது .
கதைச்சுருக்கம்
திரைவடிவம்
முள்ளும் மலரும் மகேந்திரன் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது.