ஏ. கே. செட்டியார்
From Tamil Wiki
ஏ. கே. செட்டியார் (ஏ. கருப்பன் செட்டியார்; பிறப்பு: நவம்பர் 3, 1911; இறப்பு: செப்டம்பர் 10, 1983), தமிழில் பயண இலக்கியம், ஆவணப் படங்கள் என்று பல தளங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். காந்தி பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்தவர். ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று போற்றப்பட்டவர். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ‘குமரி மலர்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தியவர்.