டி.கே.எஸ் சகோதரர்கள்

From Tamil Wiki
Revision as of 17:46, 11 July 2022 by Ramya (talk | contribs) (Created page with "டி.கே.எஸ் சகோதரர்கள் தமிழ் நாடக முன்னோடிகளில் முதன்மையானவர்கள். 'ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை’ ஏற்படுத்தி நாடக அரங்கேற்றங்கள் செய்தனர். == டி.கே.எஸ் சகோதரர்கள் == டி.எஸ்.கண்ணுசாமிப் ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

டி.கே.எஸ் சகோதரர்கள் தமிழ் நாடக முன்னோடிகளில் முதன்மையானவர்கள். 'ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை’ ஏற்படுத்தி நாடக அரங்கேற்றங்கள் செய்தனர்.

டி.கே.எஸ் சகோதரர்கள்

டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை, சீதையம்மாள் இணையருக்கு நான்கு மகன்கள். இந்த நால்வரும் நாடக உலகில், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நுழைந்த போது பள்ளிச் சிறுவர்கள்.

ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை

மார்ச் 31, 1925-ல் டி.கே.எஸ்.சகோதரர்களின் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை" நாடகக் குழு தொடங்கப்பட்டது. 1950 வரை தமிழ் நாட்டிலும், உலக நாடுகள் பலவற்றிலும் தொழில் முறை நாடகக்குழுவாக ஏராளமான நாடகங்களை நடத்தி நாடக உலகிற்கு மறுமலர்ச்சியை அளித்தனர். 1937-ல் சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளைக் கலைக் கண்ணோடு எடுத்துக் காட்டி டி.கே.முத்துசாமி எழுதிய "குமாஸ்தாவின் பெண்"நாடகத்தை அரங்கேற்றினார்கள். 'அன்ன பூர்னிகா மந்திர்’ என்ற வங்காளி நாவலைத் தழுவி எழுதப்பட்டது இந்நாடகம்.

கலை வாழ்க்கை

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "வித்யா சாகரர்" என்ற நாவலும் டி.கே. முத்துசாமியால் நாடகமாக்கப்பட்டது. தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் சிறப்புச் செய்யும் வகையில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் எழுதிய "சிவலீலா" நாடகத்தை நடத்தினர். இந்நாடகம் தொடர்ந்து 108 நாட்கள் நடந்தது. 108ஆவது நாள் மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள் வருகை புரிந்து "முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினங்கள்" என்ற பட்டத்தை வழங்கினர்.

ஔவை சண்முகம்

பிப்ரவரி 2, 1942-ல் மதுரையில் பி.எத்திராஜுலு எழுதிய ஔவையார் நாடகம் அரங்கேறியது. இந்நாடகத்தில் கதாநாயகன் கிடையாது. கதாநாயகி உண்டு. ஆனால் கதாநாயகியும் ஒரு மூதாட்டி. காதல் காட்சிகள் இல்லை. நாடக இலக்கணப்படி தோன்றல், திரிதல் ஆகிய முறைகளை அனுசரித்து எழுதப்படாத புதுமை நாடகம். இந்நாடகம் மகத்தான வெற்றி பெற்றது. தமிழ் நாடக உலகிற்கே மாபெரும் வெற்றி எனலாம். இந்நாடகத்தில் ஔவையாராக நடித்தார் டி.கே.சண்முகம் அவர்கள். இது அவரது நாடக வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் பாராட்டு. இதற்கு பின்னர் ஔவையார் என்ற அடைமொழியோடு ’ஔவை சண்முகம்’ என்று அழைக்கப்பட்டார்.

"மனுஷ்யன்" எனற பா.ஆதிமூலம், நா.சோமசுந்தரம் ஆகியோர் மலையாள நாடகத்தைத் தழுவி எழுதிய "மனிதன்" நாடகம் சமுதாய நாடகங்களில் புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.

அகிலன் எழுதிய "புயல்" நாடகத்தை அரங்கேற்றினர். இது தமிழ் நாடகப் போட்டியில் பரிசு பெற்றது. ரா.வெங்கடாச்சலம் எழுதிய ’முதல் முழக்கம்’ நாடகத்தை நடத்தினர். 1950ல் டி.கே.எஸ் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை" நாடகக்குழு தன்நிறைவு விழாவை நடத்தியது.

மீண்டும் டி.கே.எஸ், குழுவினர் நாடகம் நடத்த ஆரம்பித்தனர். நா.சோமசுந்தரம் எழுதிய, "இன்ஸ்பெக்டர்". ரா.வெங்கடாசலம் எழுதிய "மனைவி". கல்கியின் "கள்வனின் காதலி" (இதை எஸ்.டி.சுந்தரம் நாடகமாக்கினார்), டி.கே.கோவிந்தனின் :'எது வாழ்வு', ஸ்ரீதரின் "ரத்தபாசம்" (எம்.எஸ்.திரௌபதி முக்கிய வேடம் ஏற்றார்)ஆகிய நாடகங்களை அரங்கேற்றம் செய்தனர்.தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் "தமிழ்ச்செல்வம்" என்ற கல்வி பிரச்சார நாடகம் எழுதினார். இந்நேரத்தில்தான் அரு.ராமநாதன் எழுதிய "இராஜ ராஜ சோழன்" எழுதிய நாடகத்தையும் டி.கே.எஸ்.நடத்தினார். தஞ்சையில் நடந்த இந்நாடகம் காண 21000க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். பின்னர் அகிலன் எழுதிய"வாழ்வில் இன்பம்" நாடகமும் நடந்தது. குழந்தைகளுக்காக "அப்பாவின் ஆசை" என்ற நாடகத்தையும் சிறுவர்கள் நடிக்க அரங்கேற்றினார் சண்முகம். இந்நாடகத்தில் தான் கமல்ஹாசன் சிறுவனாக இருக்கையில் நடித்தார்.

நாடகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள்

  • முகப்புத் திரைக்குப் பின்னுள்ள பின்னணித் திரைகளை வரிசைப்படுத்தி வைக்கும் முறையில் ஓர் ஒழுங்கினைப் புகுத்தினார்கள்.
  • ஒலிவாங்கி(mike)யிலிருந்து மூன்றடி தூரத்தில் தெருத்திரை இருக்கும். மேகத்திரை கடைசியில் இருக்கும். இடையில் காடு, அரண்மனை, தர்பார் எனப் பல திரைகள் இருக்கும். எல்லாத் திரைகளும் மேலிருந்து கீழிறங்கி வரும் வகையில் அமைக்கப்பட்டன. திரை இறங்கும் போது, ஓசை வராமலிருக்க மரக்கப்பிகள் பயன்படுத்தப்பட்டன.
  • நாடக மேடையமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறிப்பிடத் தக்கன. இவர்கள் நடத்திய சிவலீலா நாடகத்தில் வானுலகக் காட்சிக்குப் பொருத்தமாகப் பக்கத்தட்டிகளும், மேல் தொங்கட்டான்களும் அமைக்கப்பட்டிருந்தன. தொங்கட்டான்களை, மேக மண்டலம் போல் ஓவியங்கள் தீட்டி அமைத்தார்கள். அத்துடன், வளைவாக நறுக்கியும் வைத்திருந்தார்கள். விளக்கு அமைப்பிலும், ஒப்பனையிலும், இவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

உசாத்துணை