சித்து (கலம்பக உறுப்பு)
சித்து கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. சித்தர்கள் தங்கள் சித்து விளையாட்டைப்பற்றியும் மற்ற உலோகங்களைப் பொன்னாக்குவதையும் கூறுவது.
விளக்கம்
இரசவாதம் செய்யும் வல்லமையுடைய சித்தனாகத் தன்னை ஒருவன் கூறிக் கொள்வது சித்து என்னும் கலம்ப உறுப்பின் இலக்கணம். இதில் இரசவாதம் சம்பந்தமான பொருள் தோன்றுவதோடு நூலின் பாடுபொருளும் இயல்பாக உள்ளபொருளும் தோன்றும்படி அமைக்கப் பெற்றிருக்கும். இச் செய்யுட்களில் ‘அப்பா” என்ற விளி வரும்.
எடுத்துக்காட்டு
= மதுரைக் கலம்பகம்
குரும்பை வெம்முலை சேர்மது ரேசர்பொற் கோபு ரத்திற் கொடிகட்டு சித்தர்யாங்
கரும்பை முன்புகல் லானைக் கிடுஞ்சித்தர் கையிற் செங்கல் பசும்பொன்ன தாக்கினே
மிருந்த வீடும் வறும்பாழ தாமவர்க் கெடுத்துக் கொட்டிலும் பொன்வேய்ந்திடச்செய்தே
மருந்த னந்தமக் கோதன மேயப்பா ஆட கத்துமற் றாசையவ் வையர்க்கே. (57)
மறைசைக் கலம்பகம்
புன்ப வந்தொலைத் தாண்டரு ளீசர்வாழ்
பொன்மலிந்த மறைநகர்ச் சித்தரே,
மின்பு றும்மணிக் கன்னல்வில் வாங்கிடு
மேந்த லுக்கயம்பொற்சுக மாக்கினோம்,
வன்பு றும்மயிலூர்கந்த வேளுக்கு
மருவத் தாரமுன் மாதங்க மாக்கினோ,
மன்பு றுங்கரி யோனுக்குந் தாரமபொன்
னாககினோஞ் சித்தளவில வண்ணமே. (28)
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.