கோபிகிருஷ்ணன்

From Tamil Wiki

கோபி கிருஷ்ணன் ( 1945- மே 10,2003) தமிழ் எழுத்தாளர். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர்

பிறப்பு, கல்வி

அவர் 1945 இல் மதுரையில் ஒரு சௌராஷ்ட்ரா குடும்பத்தில் பிறந்தார்.

தனி வாழ்க்கை

இலக்கியப் பணி

1983 இறுதியில் சிறுகதைகள் எழுதத்துவங்கினார். 20 ஆண்டுகளில் எழுதப்பட்ட அவருடைய 86 சிறுகதைகள் 4 குறுநாவல்களை இரு பெரும் வகைமைகளுக்குள் கொண்டுவரலாம். பிறழ்மனநிலை சார்ந்த கதைகள் ஒருவகை.வறுமை, இல்லாமை, போதாமை, கைவிடப்பட்ட ஒரு நிலை, ஒரு கௌரவமான வாழ்க்கைக்கான ஏக்கம், எதிர்பார்ப்புகளற்ற மனித உறவுகளுக்கான பெரு விழைவு இவற்றைப் பேசிய கதைகள் இன்னொரு வகை.. இரண்டுக்கும் இடையில் ஊடாட்டம் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கோபியின் கதைகளில் பெரிதும் பேசப்படுவது ஆண்-பெண் உறவு, நட்பு, காதல், காதலல்லாத மடை திறக்கும் வெள்ளமெனப்பெருகும் நேசம். அப்பா-மகள்,தோழன் -தோழர், நட்பு என எத்தனை விதமான பெயர்களில் மற்றும் பெயரற்ற உறவுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சாத்தியமோ அத்தனை குறித்தும் கதை எழுதிய ஒரே தமிழ்ப்படைப்பாளி கோபி கிருஷ்ணன் தான் என்று அடித்துச் சொல்லலாம்.

தாரா என்கிற பெயரில் மனைவியும் வாணி என்கிற பெயரில் ஒரு பெண் குழந்தையும்தான் எல்லாக்கதைகளிலும் வருவார்கள். ”பிறழ்வு-விடிவு” குறுநாவலில் மட்டும் பிரபு என்கிற ஆண் குழந்தை. வாணியைத்தன் மகளாக அல்லாமல் ஒரு நண்பரைப்போல நடத்த விழைகிறார்.

இலக்கிய இடம்

”என் எண்ணங்களை,அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகத்தான் எழுதுகிறேன்.எனக்கு வாழ்க்கை இம்மாதிரி அமைந்திருக்கிரது. உங்களுக்கு எப்படி… என்பது போலத்தான்.” என்று நேர்காணலில் குறிப்பிடுகிறார். சக மனிதர்களுடனான பகிர்தல் தொனி அவர் கதைகளில் தொடர்ந்து நீடிப்பதற்குக் காரணம் இதுவே.

இறப்பு

படைப்புகள்

உசாத்துணை

தமிழ்ச்சிறுகதைகளின் அரசியல் -கோபி கிருஷ்ணன் ச.தமிழ்ச்செல்வன்