being created

கைந்நிலை

From Tamil Wiki
Revision as of 14:36, 1 July 2022 by ASN (talk | contribs) (link corrected)
கைந்நிலை - அனந்தராமையர் உரை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று கைந்நிலை. இதனை அனந்தராமையர் என்பவர் பதிப்பித்தார்.

பதிப்பு வரலாறு

60 பாடல்களைக் கொண்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் தமிழர்களின் ஐவகை நிலங்களைப் பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. அதனால் கைந்நிலைக்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. கைந்நிலையே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம் பெறத்தக்கது என்பது அனந்தராமையரின் கருத்து.

கைந்நிலை பற்றி சங்குப்புலவரின் கருத்து

கைந்நிலையைப் பற்றி சங்குப்புலவர் தனது ஆய்வு நூலில், “இந்நூலில் ஆறாம் எண்ணுள்ள ‘மரையாவுகளும்’ என்ற கவியும், ஏழாம் எண்ணுள்ள ‘தாழை குருகினும்’ என்ற கவியும் தொல்காப்பியம் இளம்பூரணத்தில் இன்ன இன்ன துறைக்கு மேற்கோளாகக் காட்டப்பட்டன என்று பழையவுரை காட்டுகிறது. அதன்படியே ஆராய்ந்தால் ஆங்காங்கு அவைகளே மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியத்திலும் ஒன்று மேற்கோளாகக் காட்டப்பட்டதாகவும் நம்பியகப்பொருளில் இரண்டடி மட்டுமே மேற்கோளாகக் காட்டப்பட்டதாகவும் பழையவுரை கூறுகிறது. அதன்படியே அமைந்திருக்கிறது” [1] என்கிறார்.

கைந்நிலை தொல்காப்பியம், நம்பி அகப்பொருள் போன்றவற்றில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளமையால் அதுவே கீழ்க்கணக்கு நூல்களில் இடம் பெறத் தக்கது என்பது சங்குப் புலவரின் முடிவு.

வ.உ.சி.க்கு நிகழ்ந்த ஏமாற்றம்

”திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் 'இன்னிலை' என்ற பேரில் ஒரு நூலின் ஏட்டை வ.உ.சி.யிடம் கொடுத்து இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று எனக் கூறி வ.உ.சி.யிடம் கணிசமாக பணமும் பெற்றிருக்கிறார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இன்னிலையையும் சேர்த்து அதை பதிப்பித்தார் வ.உ.சி. இப்பதிப்பு போலியானது, தவறானது என மயிலை சீனி வேங்கடசாமி, மு. அருணாசலம் ஆகியோர் எழுதிய பின்பு வ.உ.சி.யின் பதிப்பு தவறானது என்று தெரிந்தது. 1931-ல் அனந்தராம ஐயர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று 'கைந்நிலை' என பதிப்பித்த பின்னர் வ.உ.சி. மனம் நொந்திருக்கிறார். இதை வையாபுரிப்பிள்ளையும் கு. அருணாசலக்கவுண்டரும் பதிவு செய்துள்ளனர்.” [2] என்கிறது இக்கட்டுரை.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.