முன்னிலா (சிறுகதைத் தொகுப்பு)

From Tamil Wiki
Revision as of 13:05, 30 June 2022 by ASN (talk | contribs) (Para and Table Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அ.மாதவையா அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு முன்னிலா. தினமணி காரியாலயம் இந்த நூலை 1944-ல் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர் பி.ஸ்ரீ.

பதிப்பு விவரம்

அ.மாதவையாவிற்கு மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், விசாலாக்ஷி அம்மாள், முத்துலக்ஷ்மி அம்மாள், சரஸ்வதி அம்மாள் என ஐந்து மகள்களும் மா.அனந்தநாராயணன், மா. யக்ஞ நாராயணன், மா. கிருஷ்ணன் என மூன்று மகன்களும் உண்டு. இவர்களில் மா.அனந்தநாராயணன், மா. கிருஷ்ணன், மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், விசாலாக்ஷி அம்மாள், சரஸ்வதி அம்மாள் ஆகியோர் சிறுகதை ஆசிரியர்கள். மா.கிருஷ்ணன் தவிர்த்துப் பிறர் அனைவருமே மாதவையா நடத்திய ‘பஞ்சாமிர்தம்’ இதழில் பங்களிப்புச் செய்தவர்கள். இவர்களது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை தினமணி காரியாலயம் 1944-ல் பிரசுரம் செய்தது. தினமணி காரியாலயம் வெளியிட்ட ஒன்பதாவது நூல் இது.

தொகுப்பின் உள்ளடக்கம்

இந்நூலில் மொத்தம் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

எண் சிறுகதை ஆசிரியர்
1 முன்னிலா மா.அனந்தநாராயணன்
2 மாசி பிறந்த நாள் மா.கிருஷ்ணன்
3 தூரத்துப் பச்சை வி.விசாலாக்ஷி அம்மாள்
4 கிராமவாசம் எம்.லக்ஷ்மி அம்மாள்
5 கெரஸொப்பா நீர்வீழ்ச்சி எம்.சரஸ்வதி அம்மாள்
6 மயிலாப்பூர் வக்கீல் மா.அனந்தநாராயணன்
7 மகாராசாவின் வெள்ளநாக்குட்டி மா.கிருஷ்ணன்
8 அபஸ்வரம் எம்.சரஸ்வதி அம்மாள்
9 இராவணனின் தினசரிக் குறிப்புகள் மா.கிருஷ்ணன்
10 சித்திராப் பௌர்ணமி எம் மீனாம்பாள்
11 மலைப்பச்சிலை எம்.லக்ஷ்மி அம்மாள்
12 சிபார்சு கிருஷ்ணன்