மாணிக்கம்

From Tamil Wiki
Revision as of 20:13, 21 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|மாணிக்கம் மாணிக்கம் (2002) சு.தமிழ்ச்செல்வி எழுதிய நாவல். காவிரியில் நீர் வராமையால் அங்குள்ள வேளாண்மக்களின் வாழ்க்கை சீரழிவதைச் சித்தரிக்கும் நாவல் == எழுத்து, வெளியீட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மாணிக்கம்

மாணிக்கம் (2002) சு.தமிழ்ச்செல்வி எழுதிய நாவல். காவிரியில் நீர் வராமையால் அங்குள்ள வேளாண்மக்களின் வாழ்க்கை சீரழிவதைச் சித்தரிக்கும் நாவல்

எழுத்து, வெளியீடு

சு.தமிழ்ச்செல்வி இந்நாவலை 2002ல் எழுதினார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டது

கதைச்சுருக்கம்

காவிரியில் தண்ணீர் வராததால் வறண்டுபோன விவசாய நிலங்கள் உவர் நிலங்களாக மாறிப்போனதும் விவசாயத்தை நம்பியிருந்த மக்கள் தமது தொழிற்கருவிகளை மாற்றிக் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை அடிப்படையாகக் கொண்ட நாவல். படித்திருந்தும் புரிதலற்ற வாழ்க்கை வாழும், சூதாட்டம், குடி என வாழ்வின் எதிர்திசையில் பயணிக்கும் மாணிக்கத்தால், அவனது நிலையற்ற மனதால் பாதிக்கப்படும் குடும்பத்தைக் காக்க கடுமையாய் உழைக்கும் மனைவியின் போராட்டத்தைச் சொல்கிறது.

விருது

2002-ல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நாவலுக்கான விருதைப் பெற்றது.

இலக்கிய இடம்

சு.தமிழ்ச்செல்வியின் முதல்நாவலான இது தஞ்சைப்பகுதி வேளாண்மை வீழ்ச்சியடைவதையும், அதன் விளைவான வாழ்க்கைத் திரிபுகளையும் யதார்த்தவாத அழகியலுடன் கூறுகிறது

உசாத்துணை