being created

அரவிந்தர்

From Tamil Wiki
Revision as of 22:58, 7 June 2022 by Navingssv (talk | contribs)

ஸ்ரீ அரவிந்தர் என்றறியப்படும் அரவிந்த கோஷ் (ஆகஸ்ட் 15, 1872 - டிசம்பர் 5, 1950) இந்திய தேசியவாதி, விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர், ஆன்மீகத் தலைவர், கவிஞர். இந்திய விடுதலை போராட்டத்தில் இணைந்து சிறைசென்றவர் சிறையின் தன்மையில் ஏற்பட்ட மாற்றத்தால் ஆன்மீக வாழ்வை மேற்கொண்டவர்.

பிறப்பு, கல்வி

அரவிந்தர் ஆகஸ்ட் 15, 1872 அன்று காலை 4.52 மணிக்கு கல்கத்தாவில் கிருஷ்ண தன கோஷ், ஸ்வர்ணலதா தேவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தன கோஷின் சொந்த ஊர் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கோனகர் கிராமம். கிருஷ்ண தன கோஷ் கோனகர் கிராமத்தில் செல்வந்தர் வீட்டில் பிறந்தவர். வெளிநாடு சென்று கல்வி முடித்துத் திரும்பியதால் இந்து சமுதாயம் கிருஷ்ண தன் கோஷை, “கடல் கடந்து சென்ற பாவத்தைப் போக்க பிராயசித்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் சாதிப்பிரஷ்டம் செய்யப்படுவீர்” என எச்சரித்தனர். அதனால் தன் கிராமத்தில் உள்ள சொத்துக்களை விற்று கோனகர் ஊரை விட்டு வெளியேறினார்.

கிருஷ்ண தன கோஷ் பகல்பூர், ராம்பூர், குல்னா மாவட்டங்களில் சிவில் சர்ஜனாகப் பணியாற்றினார். கிருஷ்ண தன கோஷ் கல்கத்தாவில் பணியாற்றிய போது அரவிந்தர் பிறந்தார். அரவிந்தர் இவர்களுக்கு மூன்றாவது மகன். அரவிந்தருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். விநயபூஷண், மனமோகன் என இரு அண்ணன்கள். தங்கை சரோஜினி, தம்பி பரீந்திரன்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.