under review

கமலம்

From Tamil Wiki
Revision as of 12:09, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:வார இதழ்கள் to Category:வார இதழ்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Kamalam. ‎

கமலம்

கமலம் (1982) சாண்டில்யன் தன் கதைகளை வெளியிடுவதற்கென்றே தொடங்கிய வார இதழ். ஓரிரு இதழ்களுடன் நின்றுவிட்டது

இதழ் வரலாறு

1982-ல் ஜனவரி முதல் கமலம் இதழ் வெளியாகியது. விலை ஒரு ரூபாய் இருபது காசு. சாண்டில்யன் அதில் ஆசியராகப் பணியாற்றினார். முதல் சில இதழ்களிலேயே சாண்டில்யன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். அதன்பின் இருகூரான் என்பவர் ஆசிரியராக இருந்து சிலமாதங்கள் வெளியானது. அதன்பின் இதழ் நின்றுவிட்டது.

உள்ளடக்கம்

இதழில் சாண்டில்யனின் கதாநாயகிகள் வாசகர்களுடன் உரையாடும் ஒரு தொடர்பகுதி வெளிவந்து வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. சாண்டில்யன் எழுதிய 'கடல் நீலி’ என்கிற தொடர்கதையும் பாதியில் நின்று விட்டது.

கடல்நீலி கதை ராஜதிலகம் நாவலின் தொடர்ச்சி. அதில் ராமநாதன் என்னும் கதைநாயகனை கொண்டு ராஜசிம்ம பல்லவனை (இரண்டாம் நரசிம்மன்) மையமாக்கி அந்நாவலை தொடங்கினார். பின்ன குமுதம் வார இதழில் 'சீன மோகினி’ என்ற தலைப்பில் அதே வரலாற்றை எழுத தொடங்கி சில வாரங்களில் மறைந்தார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:27 IST