அபிநந்தநாதர்
From Tamil Wiki
To read the article in English: Abhinandannath.
அபிநந்தநாதர் சமண சமயத்தின் நான்காவது தீர்த்தங்கரர்.
புராணம்
அபிநந்தநாதர் இக்ஷவாகு குலமன்னர் சன்வராவுக்கும் சித்தார்த்தாவுக்கும் மகனாக அயோத்தியில் மாசி வளர்பிறை 12-ம் நாள் பிறந்தார். ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் வைகாசி வளர்பிறை 6-ம் நாள்மோட்சம் அடைந்தார். இவர் ஐம்பது லட்சம் ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், 350 வில் (1050 மீட்டர்) உயரம் இருந்ததாகவும் சமணர்கள் நம்புகின்றனர்.
அடையாளங்கள்
- நிறம்: தங்கம்
- மரம்: அரச மரம்
- விலங்கு: குரங்கு
- முதல் உணவு: மன்னர் இந்திரதத்தனால் வழங்கப்பட்ட கீர்.
- இயக்கர்: யக்யேஸ்வரன்
- யட்சினி: காளிகா
அபிநந்தநாதர் கோயில்
- அபிநந்தநாதர் கோயில், மதுபன், ஜோர்ஹாத், அசாம்
- அபிநந்தநாதார் சந்நதி, சிகார்ஜி, ஜார்க்கண்டு
- அபிநந்தநாதரின் பாதச்சுவடுகள், சிகார்ஜி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:57 IST