சேந்தனார்
From Tamil Wiki
சேந்தனார் (சேந்தன்) (பொ.யு. 8-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். திவாகர நிகண்டு நூலைச் செய்யக்காரணமாக அமைந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சேந்தனார் தஞ்சாவூரைச் சேர்ந்த அரிசில் ஆற்றங்கரையிலுள்ள அம்பர் என்ற ஊரில் பிறந்த அந்தணர். தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். 'உபயகவி' என்று அழைக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
சேந்தனார் 'சேந்தன் திவாகரம்' என்றும் அழைக்கப்பட்ட திவாகர நிகண்டு நூலை திவாகரரை எழுதும்படி ஊக்குவித்தார். திவாகர நிகண்டில் இரண்டாயிரத்து இருநூற்று எண்பத்தி ஆறு சூத்திரங்கள் உள்ளன. திவாகரர் இவரின் மாணவராக இருக்கலாம் என அறிஞர்கள் கருதினர். "செங்கதிர் வரத்திற் ருேன்றுந் திவாகரர்" என்று மண்டலபுருடர் சூடாமணி நிகண்டில் பாடியிருப்பதால் திவாகரர் என்பவர் இருந்தார் என அறிஞர்கள் கருதினர்.
உசாத்துணை
- பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்
- சங்ககால அரசர் வரலாறு: தஞ்சைப் பல்கலைக்கழகம்: முனைவர் வ. குருநாதன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Oct-2023, 06:10:01 IST