under review

மோசி சாத்தனார்

From Tamil Wiki
Revision as of 13:33, 12 November 2024 by Logamadevi (talk | contribs)

மோசி சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடல் ஒன்று, புறநானூறில் உள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மோசி சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மோசி என்னும் ஊரினை சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மோசி சாத்தனார் பாடிய பாடல் புறநானூறில் 272-வது பாடலாக அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

அகழியையும் காவல் காட்டையும் பாதுகாக்கும் காவலர் பணியில் ஈடுபட்டு இறந்த வீரனின் பெருமையை சொல்லும் பாடல். நொச்சித்திணையில் அமைந்தது.

  • கரு நொச்சி செடியின் மலர்கள் கொத்து கொத்தாய் பூத்து நிற்கும்.
  • பெண்கள் கைவளையலும் தோள்வளையும் அணிந்திருப்பர். நொச்சி செடியின் தழையால் செய்யப்பட்ட இடையாடையை அணிந்திருப்பர்.
  • காவல் மதிலில் நின்றிருக்கும் வீரர்கள் நொச்சி மலரால் ஆன மாலையை தலையில் சூடியிருப்பர்.

பாடல் நடை

புறநானூறு - 272

திணை: நொச்சி துறை: செறுவிடை வீழ்தல்

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி,
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீமற் றிசினே;
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.

உசாத்துணை

‎


✅Finalised Page