under review

கௌதமர்

From Tamil Wiki
Revision as of 19:59, 6 November 2024 by Madhusaml (talk | contribs) (category added)
ஆச்சாரிய துண்டிராஜ சாஸ்திரி எழுதிய நியாயவியல் நூலில் உள்ள கௌதமரின் சித்தரிப்பு

கௌதமர் (பொமு. 200-400) இந்து தத்துவ ஞானி. இந்து மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றான நியாயவியலின் முதலாசிரியர். நியாயம் இந்திய தர்க்கவியல் என அழைக்கப்படுகிறது. இவருக்கு அக்ஷபாத கௌதமர் என்றும் பெயருண்டு. இவர் இயற்றிய நூல் நியாய சூத்ரம்.

தரிசனம்

கௌதமர் நியாயம் என்னும் இந்து மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றின் முதன்மை ஆசிரியராகக் கருதப்படுகிறார்.

வாழ்க்கை

கௌதமர் சில நூல்களில் அக்ஷபாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கௌதமர் என்பது அவருடைய கோத்திரப் பெயராக இருக்கலாம். பொமு 400 வாக்கில் வாழ்ந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பத்ம புராணம், ஸ்கந்த புராணம் ஆகிய நூல்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அக்ஷபாத என்பது (கால்களில் கண் கொண்டது என்ற பொருளில்) புலி, பூனைக்குரிய பெயர். அவ்வகையில் சில தொன்மங்களில் புலிமுகத்துடன் கௌதமர் சித்தரிக்கப்பட்டுள்ளார். சில நூல்களில் இவர் தீர்க்கதபஸ் என்றும் சொல்லப்பட்டுள்ளார்.

காலம்

தொன்மையான பௌத்த ,சமண அறிஞர்களே நியாயசூத்ரம் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஆகவே இவர் பொமு 200க்கு முன் பொமு 400 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

நூல்

கௌதமர் எழுதிய நூல் நியாய சூத்ரம். இந்நூல் நியாயவியலின் முதன்மைப் படைப்பாக கருதப்படுகிறது. இதற்கு தொடர்ச்சியாக உரைகளும் விளக்கங்களும் எழுதப்பட்டுள்ளன (நியாயசூத்ரம்)

உசாத்துணை


✅Finalised Page