கௌதமர்
From Tamil Wiki
கௌதமர். ( ) இந்து தத்துவ ஞானி. இந்து மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றான நியாயவியலின் முதலாசிரியர். நியாயம் இந்திய தர்க்கவியல் என அழைக்கப்படுகிறது. இவருக்கு அக்ஷபாத கௌதமர் என்றும் பெயருண்டு. இவர் இயற்றிய நூல் நியாய சூத்ரம்.
வாழ்க்கை வரலாறு
நூல்
கௌதமர் எழுதிய நூல் நியாய சூத்ரம் . இந்நூல் நியாயவியலின் முதன்மைப்படைப்பாக கருதப்படுகிறது. இதற்கு தொடர்ச்சியாக உரைகளும் விளக்கங்களும் எழுதப்பட்டுள்ளன (நியாயசூத்ரம்)