standardised

அம்மணி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 19:10, 20 May 2022 by Jayashree (talk | contribs)

அம்மணி அம்மாள் (20-ஆம் நூற்றாண்டு) விடுதலைக்கு முந்தய தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர். தமிழின் முதல் சிறுகதையை எழுதியவராக மதிப்பிடப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவரைப் பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

தமிழின் முதல் சிறுகதையை எழுதியவராக மதிப்பிடப்படுகிறார்.இவர் எழுதிய “சங்கல்பமும் சம்பவமும்” என்ற சிறுகதை 1913-ல் விவேகபோதினி இதழில் வெளியானது. வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் வெளியாவதற்கு இரண்டாண்டுகள் முன்பே இச்சிறுகதை வெளியானது. கலைமகள் இதழில் “லஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்” சிறுகதை வெளியாகியுள்ளது. இக்கதை இ.வி. லூகாஸ் எழுதிய school of sympathy -ன் தழுவலைக் கொண்டது.

இலக்கிய இடம்

இவரின் சிறுகதைகள் சமூக நலப்பிரச்சனைகளை மையமாகக் கொண்டு அமைந்தது. அம்மணி அம்மாளின் ’சங்கல்பமும் சம்பவமும்’ சிறுகதை பற்றி, “மேலை நாட்டு பாணியில் ஆங்கிலக் கட்டுரைகளையும், கதைகளையும் தழுவி எழுதப்பட்ட கதை” என சிட்டி-சிவபாதசுந்தரம் இரட்டையர் மதிப்பிடுகின்றனர்.

நூல்கள்

சிறுகதைகள்
  • லஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்
  • பசுக்களின் மாகாநாடு
  • லஷ்மி அம்மாள்

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.