அடியார் வரலாறு

From Tamil Wiki
Revision as of 18:08, 4 May 2022 by Jeyamohan (talk | contribs)

அடியார் வரலாறு (1586)தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட நான்காவது நூல். தமிழகத்தில் அச்சிடப்பட்ட இரண்டாவது தமிழ் நூல். தொடக்ககால கிறிஸ்தவ நூல்களில் ஒன்று. போர்ச்சுகீசிய மதப்பரப்புநர்களால் இந்நூல் திருநெல்வேலி மாவட்டம் புன்னக்காயலில் அச்சிடப்பட்டது. இதன் ஆசிரியர் ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் என்னும் அண்ட்ரிக் அடிகளார்.

உருவாக்கம்

அடியார் வரலாறு ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் புன்னக்காயல் என்னும் ஊரில் 1586 ல் அச்சிடப்பட்டது. இது கத்தோலிக்கப் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் Flos Sanctorum (Jacobus de Voragine, 1472) என்னும் போர்ச்சுக்கீசிய நூலின் தமிழாக்கம். ஆனால் மொழியாக்கமாக அன்றி தழுவலாகவே எழுதப்பட்டுள்ளது.

அமைப்பு

இது 669 பக்கங்கள் கொண்ட பெரிய நூல். அற்புதச்செயல்களை நிகழ்த்தியவர்கள், துறவறம் பூண்டவர்கள் என 49 புனிதர்களின் வரலாறு இந்நூலில் உள்ளது. இந்நூலில் ஏசுவின் வரலாற்றைச் சொல்லும் இடங்கள் நேரடியாக பைபிளில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பேதுரு பவுல் ஆகியோரின் வாழ்க்கையைச் சொல்லுமிடத்தில் அப்போஸ்தலரின் நடபடிகள் என்னும் தலைப்பில் பைபிளில் வரும் பகுதிகளை ஒட்டியே ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

நடை

நம்முடைய நாயன் இசேசு கிரீசித்துத் தோட்டத்திலேயிருந்து அவற்கு உதிரத்துள்ளிகளாக வேர்த்துவிட்டதும் வருமாறு நம்முடைய நாயன் தோட்டத்திலே ஓதி விதனப்பட்டதினால் அவற்கு உதிரமாய் வேற்றுவிட்ட முகாந்திரமாய் விசாரிக்கும் விசாரங்களாவது. நம்முடைய நாயன் இசேசுகிரீசித்து தோட்டத்திலே பிடிப்பட்டதும் பிடிப்பட்டபொழுது உண்டான வர்த்தமானங்களும் வருமாறு. நம்முடைய நாயன் பிடிப்பட்ட முகாந்திரமாகவும் பிடிப்பட்டதிற்பின்பு உண்டான வர்த்தமானங்கள் முகாந்திரமாகவும் விசாரிக்கும் விசாரங்களாவது