User:Navingssv

From Tamil Wiki
எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஜி.எஸ்.எஸ்.வி.நவின்

ஜி.எஸ்.எஸ்.வி. நவின் (ஜுன் 3, 1993) தமிழ் எழுத்தாளர். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.

பிறப்பு, கல்வி

ஜி.எஸ்.எஸ்.வி. நவின் (முழுப்பெயர்: ஜி. சூரிய சண்முக வேலாயுத நவின்) அன்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கணேஷ், சண்முகசுந்தரி தம்பதிகளுக்கு மூத்த மகனாக ஜுன் 3, 1993 அன்று பிறந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார். எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆழ்வார்குறிச்சியிலுள்ள பரம கல்யாணி மேல்நிலைப் பள்ளியிலும், அமெரிக்கன் காலேஜ் மேல் நிலைப்பள்ளியிலும், மேல் நிலைக்கல்வியை ஃபுஸ்கோஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பயின்றார்.

கோயம்புத்தூர் கற்பகம் கல்லூரியில் பி.இ. (எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கிருபாலட்சுமியை 6 பிப்ரவரி 2022 இல் திருமணம் செய்து கொண்டார். பெங்களூரிலுள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  

இலக்கிய வாழ்க்கை

இளவயதிலிருந்தே இலக்கிய ஆர்வமுடைய நவின் எழுத்தாளர் ஜெயமோகனின் ஆக்கங்கள் வழி நவீன தமிழ் இலக்கியத்திற்குள் நுழைந்து தற்போது சிறுகதைகள் எழுதி வருகிறார். நாட்டாரியல் இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர் அது சார்ந்த புனைவுகளை சிறுகதைகளுக்குள் முயற்சித்துப் பார்க்கிறார். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார்.

தமிழ் நவீனக் கவிதைகளுக்காக ”கவிதைகள்” மின்னிதழை கவிஞர் மதார் மற்றும் ஆனந்த் குமாருடன் இணைந்து நடத்தி வருகிறார். விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழ் விக்க இணையதளத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.

சிறுகதைகள்

வெளி இணைப்புகள்