under review

ஜி. யு. போப் விருது

From Tamil Wiki
Revision as of 18:23, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
போப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: போப் (பெயர் பட்டியல்)

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் ஜி.யு. போப் விருதும் ஒன்று. இது 2014-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஜி.யு. போப் விருது

அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் ஜி.யு. போப் விருது வழங்கப்படுகிறது. 2014 முதல் வழங்கப்படும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும் பொன்னாடையும் கொண்டது.

ஜி.யு. போப் விருது பெற்றவர்கள் (2021 வரை)

வ.எண். ஆண்டு பெயர்
1 2014 ஜெ. நாராயணசாமி
2 2015 டாக்டர் சுதா சேஷையன்
3 2016 வைதேகி ஹெர்பர்ட்
4 2017 கோ. ராஜேஸ்வரி கோதண்டம்
5 2018 கு. கோ. சந்திரசேகரன் நாயர்
6 2019 மரிய ஜோசப் சேவியர்
7 2020 முனைவர் திருமதி உல்ரீகே நிகோலஸ்,ஜெர்மனி
8 2021 ஏ.எஸ். பன்னீர்செல்வம்

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Aug-2023, 12:33:04 IST