under review

கரந்தை மாலை

From Tamil Wiki
Revision as of 18:17, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கரந்தை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கரந்தை (பெயர் பட்டியல்)

கரந்தை மாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கரந்தைப் பூவைச் சூடிக் கொண்டு பகைவர்களுடன் போர் புரிவதைக் கூறுவது கரந்தை மாலை.

கரந்தை மாலை விளக்கம்

பகைவர்கள் தங்கள் நாட்டின் பசுக்களைக் கவர்ந்து சென்ற நிலையில், அப்பசுக்களை மீட்பதற்காக அந்நாட்டு வீரர்கள் பகைவர்களுடன் போரிடுவர். அப்போது வீர்கள் கரந்தைப் பூவைச் சூடிச் செல்வர். அதைப் பற்றிக் கூறுவது கரந்தை மாலை.

கரந்தை மாலை இலக்கணம்

மலைத்தெழுந்தோர் மறஞ்சாயத்
தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று

- எனப் புறப்பொருள் வெண்பாமாலை, கரந்தைத் திணையின் இலக்கணம் கூறுகிறது.

முத்துவீரியம் கரந்தை குறித்து,

தழுவார் கொண்ட தந்நிரை மீட்போர்
கரந்தை புனைந்து கனன்றுலவை யிற்செலீஇ
மீட்பதைக் கூறல் வெற்றிக் கரந்தை

என்று குறிப்பிட்டுள்ளது.

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Feb-2024, 03:34:19 IST