under review

ஏ.பி.பெரியசாமி புலவர்

From Tamil Wiki
Revision as of 21:46, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added links to Disambiguation page)
XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
பெரியசாமி புலவர்

To read the article in English: A.P._Periyasamy_Pulavar. ‎


ஏ.பி. பெரியசாமி புலவர் (1881 - 1939) பௌத்த அறிஞர். அயோத்திதாச பண்டிதருடன் பௌத்தத்தை தழுவினார். திருப்பத்தூரில் பௌத்த விகாரையை நிறுவினார்.

பிறப்பு, கல்வி

ஏ.பி.பெரியசாமி புலவர் மார்ச் 14 , 1881-ல் திருப்பத்தூரில் பிறந்தார். கரந்தை தமிழ்ச்சங்கத்தில் புலவர் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

ஏ.பி.பெரியசாமி புலவர் கமலபூஷணி அம்மையாரை மணர்ந்தார். மணிமேகலை மகள். ஏ.பி.பெரியசாமி புலவரின் மகன் புகழ்பெற்ற தலித் சிந்தனையாளரான தி.பெ.கமலநாதன்

பௌத்தப்பணிகள்

அயோத்திதாச பண்டிதர் தொடங்கிய தமிழ்பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் உடன் நின்று பணியாற்றினார். 1907-ம் ஆண்டு நூற்றுக்கணக்கானவர்களோடு பௌத்தத்தைத் தழுவினார். 1909-ம் ஆண்டு, மே மாதம் 18-ம் தேதியில், திருப்பத்தூர் துணை ஆட்சியர் அலுலகத்திற்கு அருகில், 'யதார்த்த பிராமணர் யார்?' எனும் தலைப்பில், பிக்கு விசுதா தலைமையில் மாநாடு ஒன்றை நடத்தினார். கோலார், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருபத்திரெண்டு பௌத்த மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தினார். 1922-ல், திருப்பத்தூரில் பௌத்த விகாரை நிறுவினார். அயோத்திதாசர் நடத்திய தமிழன் இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். 1920-ல் நேட்டால் டர்பன் பவுத்த சங்கம் தோன்றுவதற்கு, அயோத்திதாசரின் மகன் ராஜாராம் அவர்களுக்கு துணைநின்றார். நேட்டாலுக்குச் சென்று அங்கே பௌத்த சங்க விழாவில் கலந்துகொண்டார். அய்யாக்கண்ணு புலவர், ஜி.அப்பாத்துரை ஆகியோருடன் இணைந்து சாக்கியசங்க பணிகளிலும் தமிழன் இதழ் பணிகளிலும் ஈடுபட்டார்.பின்னர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் நடத்திய திராவிட இயக்க ஆதரவாளராக ஆனார்.

மறைவு

ஏ.பி.பெரியசாமி புலவர் 1939-ல் மறைந்தார்.

(ஏ.பி.வள்ளிநாயகம் கட்டுரையை ஆதாரமாக கொண்டது)

நூல்கள்

ஸ்தௌத்யப் பத்து இணையநூலகம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:54 IST