நாயன்மார்கள்

From Tamil Wiki
Revision as of 18:11, 17 April 2022 by Subhasrees (talk | contribs) (நாயன்மார்கள் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சைவ சமயத்தில் நாயன்மார்கள் என்போர் 63 சிவனடியார்கள். பெரிய புராணம் என்னும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியவர்கள். கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயன்மார் எழுதிய திருத்தொண்டர் தொகையின் அடிப்படையில் 60 நாயன்மார்கள் என்று முதலில் வகுக்கப்பட்டது. பின்னர் சுந்தரரின் பெயரும் அவருடைய பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் பெயர்களும் அதில் இணைக்கப்பட்டு அறுபத்து மூன்று நாயன்மார்களாக தொகுக்கப்பட்டது.

நாயன்மார்களுக்குச் சில சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் சிலைகள் வைக்கப்படுகின்றன. உற்சவ காலங்களில் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் உலா என்று பெயர்.

ஆதார நூல்கள்

திருத்தொண்டர் தொகை - சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றியது.

பெரிய புராணம் - நாயன்மார்களின் வரலாறு சேக்கிழாரால் பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது

நாயன்மார்கள் பட்டியல்

சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் விரிவாகப் பாடினார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரது பெற்றோர் சடையனார் - இசைஞானியார் ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

எண் பெயர் குலம் பூசை நாள்
1 அதிபத்தர் பரதவர் ஆவணி ஆயில்யம்
2 அப்பூதியடிகள் அந்தணர் தை சதயம்
3 அமர்நீதி நாயனார் வணிகர் ஆனி பூரம்
4 அரிவட்டாயர் வேளாளர் தை திருவாதிரை
5 ஆனாய நாயனார் இடையர் கார்த்திகை ஹஸ்தம்
6 இசைஞானியார் ஆதி சைவர் சித்திரை சித்திரை
7 இடங்கழி நாயனார் வேளிர் ஐப்பசி கார்த்திகை
8 இயற்பகை நாயனார் வணிகர் மார்கழி உத்திரம்
9 இளையான்குடிமாறார் வேளாளர் ஆவணி மகம்
10 உருத்திர பசுபதி நாயனார் அந்தணர் புரட்டாசி அசுவினி
11 எறிபத்த நாயனார் மரபறியார் மாசி ஹஸ்தம்
12 ஏயர்கோன் கலிகாமர் வேளாளர் ஆனி ரேவதி
13 ஏனாதி நாதர் ஈழக்குலச்சான்றார் புரட்டாசி உத்திராடம்
14 ஐயடிகள் காடவர்கோன் காடவர்,பல்லவர் ஐப்பசி மூலம்
15 கணநாதர் அந்தணர் பங்குனி திருவாதிரை
16 கணம்புல்லர் செங்குந்தர் ் கார்த்திகை கார்த்திகை
17 கண்ணப்பர் வேட்டுவர் தை மிருகசீருஷம்
18 கலிய நாயனார் செக்கார் ஆடி கேட்டை
19 கழறிற்றறிவார் சேரர்-அரசன் ஆடி சுவாதி
20 கழற்சிங்கர் பல்லவர்-அரசன் வைகாசி பரணி
21 காரி நாயனார் மரபறியார் மாசி பூராடம்
22 காரைக்கால் அம்மையார் வணிகர் பங்குனி சுவாதி
23 குங்கிலியகலையனார் அந்தணர் ஆவணி மூலம்
24 குலச்சிறையார் மரபறியார் ஆவணி அனுஷம்
25 கூற்றுவர் களப்பாளர் ஆடி திருவாதிரை
26 கலிக்கம்ப நாயனார் வணிகர் தை ரேவதி
27 கோச்செங்கட் சோழன் சோழர்-அரசன் மாசி சதயம்
28 கோட்புலி நாயனார் வேளாளர் ஆடி கேட்டை
29 சடைய நாயனார் ஆதி சைவர் மார்கஇசைழி திருவாதிரை
30 சண்டேசுவர நாயனார் அந்தணர் தை உத்திரம்
31 சக்தி நாயனார் வேளாளர் ஐப்பசி பூரம்
32 சாக்கியர் வேளாளர் மார்கழி பூராடம்
33 சிறப்புலி நாயனார் அந்தணர் கார்த்திகை பூராடம்
34 சிறுதொண்டர் மாமாத்திரர் சித்திரை பரணி
35 சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர் ஆடிச் சுவாதி
36 செருத்துணை நாயனார் வேளாளர் ஆவணி பூசம்
37 சோமசிமாறர் அந்தணர் வைகாசி ஆயிலியம்
38 தண்டியடிகள் செங்குந்தர் பங்குனி சதயம்
39 திருக்குறிப்புத் தொண்டர் வண்ணார் சித்திரை சுவாதி
40 திருஞானசம்பந்தமூர்த்தி அந்தணர் வைகாசி மூலம்
41 திருநாவுக்கரசர் வேளாளர் சித்திரை சதயம்
42 திருநாளை போவார் புலையர் புரட்டாசி ரோகிணி
43 திருநீலகண்டர் குயவர் தை விசாகம்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் வைகாசி மூலம்
45 திருநீலநக்க நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
46 திருமூலர் இடையர் ஐப்பசி அசுவினி
47 நமிநந்தியடிகள் அந்தணர் வைகாசி பூசம்
48 நரசிங்க முனையர் முனையரையர் புரட்டாசி சதயம்
49 நின்றசீர் நெடுமாறன் பாண்டியர் அரசர் ஐப்பசி பரணி
50 நேச நாயனார் சாலியர் பங்குனி ரோகிணி
51 புகழ்சோழன் சோழர்- அரசர் ஆடி கார்த்திகை
52 புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர் ஆனி ஆயிலியம்
53 பூசலார் அந்தணர் ஐப்பசி அனுஷம்
54 பெருமிழலைக் குறும்பர் குறும்பர் ஆடி சித்திரை
55 மங்கையர்க்கரசியார் பாண்டியர்-அரசர் சித்திரை ரோகிணி
56 மானக்கஞ்சாற நாயனார் வேளாளர் மார்கழி சுவாதி
57 முருக நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
58 முனையடுவார் நாயனார் வேளாளர் பங்குனி பூசம்
59 மூர்க்க நாயனார் வேளாளர் கார்த்திகை மூலம்
60 மூர்த்தி நாயனார் வணிகர் ஆடி கார்த்திகை
61 மெய்ப்பொருள் நாயனார் குறுநில மன்னர் கார்த்திகை உத்திரம்
62 வாயிலார் நாயனார் வேளாளர் மார்கழி ரேவதி
63 விறன்மிண்ட நாயனார் வேளாளர் சித்திரை திருவாதிரை

சமயக் குரவர்கள்

சைவ அடியவர்களில் அப்பர் (திருநாவுக்கரசர்), திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் குறிப்பிடப்படாத மாணிக்கவாசகரும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், 4,5,6 ஆம் திருமுறைகள் திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் இயற்றப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்கள். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து வாழ்ந்தவர்கள்.