being created

வரதுங்கராம பாண்டியர்

From Tamil Wiki

வரதுங்கராம பாண்டியர் (அபிராம சுந்தரேசன்,வீரபாண்டியன்) (பொ.யு. 1588 -பொ.யு. 1612) திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னர். சிவ பக்தரான வரதுங்கராம பாண்டியர் பிரமோத்தர காண்டம் போன்ற நூல்களை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

திருக்கருவை என்னும் கரிவலம்வந்த நலூரைத் தலைநகராகக் கொண்டு தென்பாண்டி நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவர். இவருக்கு சந்ததிகள் இல்லாததால் சிவபெருமானெ அந்தண வாலிபன் உருவில் வந்து அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ததாக தொன்மம் கூறுகிறது.

வரதுங்கன் முடிசூட்டுவிழாவின்போது கலியன் கவிராயர் என்பார் நாண்மங்கலம், குடைமங்கலம் ஆகியவற்றைப் பாடி வாழ்த்தினார். மற்றொருவர் ஐயம்பெருமாள் சிவந்த கவி என்பவர் புரூரவச் சக்கரவர்த்தி கதையை 920 பாடல்களில் பாடினார்.

வரதுங்கராம     பாண்டியன் வேம்பற்றூர் ஈசான முனிவரையும் தம் குருநாதர்களாகக் கொண்டிருந்தனர்.

இலக்கிய வாழ்க்கை

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் போல் தமிழில் புலமை பெற்றிருந்தான்.பிரமோத்தர காண்டம்,கருவை கலித்துறை அந்தாதி,கருவை பதிற்றுப்பத்தந்தாதி,கருவை வெண்பா அந்தாதி, கொக்கோகம் ஆகிய நூல்களினைப் பாடிய பெருமையினை உடையவனான இவன் சிவனிடம் பக்தி உடையவனாகத் திகழ்ந்தான்.

பிரமோத்தர காண்டம் பஞ்சாக்ஷரம், விபூதி, சோமவாரம், பிரதோஷம் இவற்றின் பெருமைகளைக் கூறுவது. வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப் பெற்றது. பாயிரம் உள்பட 22 அத்தியாயங்களையும் 1310 விருத்தங்களையும் உடையது.

திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி கரிவலம் வந்தநல்லூர் சிவபிரான் மீது பாடப் பெற்றது. குட்டித் திருவாசகம் எனப் பாராட்டப்பெறுவது.

பாடல் நடை

சிவ கவசம்

அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,

       துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம்

       தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த

       மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க.


உசாத்துணை

சிவகவசம், ஆர்கைவ் வலைத்தளம்










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.