under review

திருக்கழுமல மும்மணிக்கோவை

From Tamil Wiki
Revision as of 20:33, 14 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added display-text to hyperlinks)
திருவிடை மருதூர் மும்மணிக்கோவை (நன்றி: சொல்வனம்)

திருக்கழுமல மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான மும்மணிக்கோவை வகையில் அமைந்த நூல். சைவ நூல். இந்நூல் நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நூல் பற்றி

‘கழுமலம்' என்பது சீகாழி (தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்த சீர்காழி). சீகாழியில் உள்ள சிவபெருமானை ஆசிரியம், வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் மூவகை பாடல்கள் மாறிமாறி அந்தாதியாக பாடப்பட்ட நூல். ஆனால் பாடலின் இறுதித் தொடர் அங்ஙனம் அமையவில்லை. எனவே இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை என அறிஞர்கள் கருதுகின்றனர். இந்நூலில் 30 பாடல்கள் இருக்க வேண்டும். அவற்றுள் 12 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட 18 பாடல்களின் சொல்லும் பொருளும் பிற்காலத்தனவாக உள்ளன என்று ம.பாலசுப்பிரமணிய முதலியார் கூறுவார்.

இந்த நூலிலுள்ள ஆசிரியப்பாக்கள் இணைகுறள் ஆசிரியப்பாக்களாக உள்ளன. இதனை இயற்றியவர் திருவொற்றியூரைச் சேர்ந்த பட்டணத்துப் பிள்ளையார் எனப்படும் பட்டினத்தடிகள்.

பாடல் நடை

வெண்பா

அருளின் கடலடியேன் அன்பென்னு மாறு
பொருளின் திகழ்புகலி நாதன் – இருள்புகுதும்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்
அண்டத்தார் நாமார் அதற்கு.

கட்டளைக்கலித்துறை

ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளர்
தெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாத(து)ஒரு
களிவந்த வாஅன் புகைவந்த வாகடை சார்அமையத்(து)
தெளிவந்த வாநம் கழுமல வாணர்தம் இன்னருளே.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.