first review completed

காலசக்கரம் நரசிம்மா

From Tamil Wiki
Revision as of 09:48, 14 April 2022 by Logamadevi (talk | contribs)
காலசக்கரம் நரசிம்மா

காலசக்கரம் நரசிம்மா (டி ஏ நரசிம்மன்) தமிழ் எழுத்தாளர்.பொதுவாசிப்புக்கான நாவல்களை எழுதுகிறார். பெரும்பாலும் சரித்திரப் பின்னணி கொண்ட நாவல்கள்.

வாழ்க்கை

திரை எழுத்தாளர் சித்ராலயா கோபு- எழுத்தாளர் கமலா சடகோபன் இணையரின் மகன். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

நரசிம்மன் எழுதிய முதல்நாவல் காலசக்கரம். அதிலிருந்து காலச்சக்கரம் நரசிம்மாவாக அறியப்படுகிறார். தொடர்ந்து நாவல்களை எழுதி வருகிறார்

திரையூடகம்

தொலைக்காட்சிகளுக்காக நரசிம்மா எழுதிக்கொண்டிருக்கிறார். திரைக்கதை வசனம் எழுதிய தொடர்கள்

  • கிருஷ்ணா காட்டேஜ்
  • அபிராமி
  • அனிதா வனிதா
  • மாயா

இலக்கிய இடம்

தமிழில் பொதுவாசகர்களுக்கான கற்பனாவாதப் வரலாற்றுப் புனைவுகளின் மூன்றாம் காலகட்டத்தைச் சேர்ந்தவை காலசக்கரம் நரசிம்மா எழுதும் கதைகள். கல்கி காலகட்டத்துக் கதைகள் சாகசங்கள் மற்றும் நாடகத்தருணங்களுடன் வரலாற்றுக் காலகட்டங்களின் சித்திரத்தைச் சொல்லமுயன்றவை. இரண்டாம் கட்டத்தில் சாண்டில்யன்- ஜெகசிற்பியன் கதைகள் வரலாற்றை சாகசங்களுக்கும் காதலுக்குமான பின்னணியாக மட்டுமே கையாண்டவை. மூன்றாம் காலகட்டப் புனைவுகள் மர்மம், திகில், துப்பறிதல் ஆகியவற்றுக்கு சரித்திரப்பின்னணியை அளிப்பவை. இந்திரா சௌந்தரராஜன், உதயணன், கே.என்.சிவராமன் போன்றவர்களின் வரிசையில் வருபவர் காலசக்கரம் நரசிம்மா.

இவருடைய கதைகள் பொதுவாசகர்களுக்கு பரபரப்பான வாசிப்பை அளிக்கும் தன்மை கொண்டவை. சமகாலப்பின்னணியில் அமைண்டஹ் வழக்கமான துப்பறியும் கதைகளுக்குரிய நடையும் கதையோட்டமும் கொண்டவை. ஆனால் சரித்திரப்பின்னணியையும் சரித்திரகால மர்மங்களையும் பிரச்சினைகளையும் பேசுபொருளாகக் கொண்டுள்ளன.

நூல்கள்

நாவல்கள்
  • காலசக்கரம்
  • ரங்கராட்டினம்
  • சங்கதாரா
  • பஞ்ச நாராயண கோட்டம்
  • கர்ணபரம்பரை
  • குபேரவன காவல்
  • அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா
  • அத்திமலைத்தேவன்
  • மூவிடத்து வானரதம்
சிறுகதைகள்
  • பாத்திரமறிந்து
பொது
  • காதலிக்க நேரமில்லை உருவான கதை
  • அன்னிய மண்ணில் சிவந்த மண்
  • சகலகலா பாபு

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.