under review

தென்றல்

From Tamil Wiki
Revision as of 16:23, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தென்றல்

தென்றல் (1953-1962) கவிஞர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்த இதழ். மரபுக்கவிதைகளை வெளியிட்டது. அரசியல் சார்ந்து தீவிரமான கருத்துக்கள் வெளியாயின. இதழுடன் இணைந்து தென்றல் திரை என்னும் சினிமா இதழையும் கண்ணதாசன் நடத்தினார்.

அமெரிக்காவில் இருந்து தென்றல் என்னும் பல்சுவை இதழ் வெளிவருகிறது (பார்க்க தென்றல் இதழ்)

வெளியீடு

கண்ணதாசன் சண்டமாருதம், திருமகள், முல்லை, திரைஒலி, மேதாவி ஆகிய இதழ்களை நடத்தினார். அதன்பின் கண்ணதாசனை ஆசிரியராகக் கொண்டு 1954 முதல் 1962 வரை எட்டு ஆண்டுகள் வார இதழாக "தென்றல்" வெளிவந்தது. கண்ணதாசன், பாரதிதாசன், தாம்பரம் எத்திராசன் ஆகியோர் இதழை மேற்பார்வையிட்டு நடத்தினர். மே 14, 1955 அன்று அவர்கள் மூவரும் வந்து அப்பணியினைச் செய்ததற்கான புகைப்படமும் தென்றல் வெளியிட்டுள்ளது. இது திராவிட முன்னேற்றக் கழக இதழ். தொடக்கத்திலேயே சுமார் 20,000 பிரதிகள்வரை விற்பனையாகியது.

உள்ளடக்கம்

திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தமையால் கடுமையான நாத்திகக் கருத்துக்களையும் அரசியல்கருத்துக்களையும் எழுதினார். தென்றல் நடத்திய வெண்பாப் போட்டியில் கவிதை எழுதியவர்கள் பிற்காலத்தில் புகழ்பெற்ற கவிஞர்களாக விளங்கினர். இவ்விதழின் துணையாசிரியராக விளங்கிய தமிழ்ப்பித்தன், ஏ. கே. வில்வம், எஸ். எஸ். தென்னரசு, ப. புகழேந்தி, நாரா. நாச்சியப்பன், அருப்புக்கோட்டை ராமசாமி, மா. பாண்டியன், ஆகியோர் பின்னாளில் புகழ்பெற்றனர். இவ்விதழில் ந. மு. வேங்கடசாமி நாட்டார், மயிலை சீனி. வேங்கடசாமி, சதாசிவ பண்டாரத்தார், கா.அப்பாத்துரை, மு. வரதராசன், மா. இராசமாணிக்கனார், அ. சிதம்பரநாதன் செட்டியார் போன்றோரின் கட்டுரைகள் வெளியாகின.

தென்றல் பொங்கல்மலர்

தென்றல் 1962 வரை தொடர்ச்சியாக வெளிவந்தது. பொங்கல் மலர்களையும் வெளியிட்டிருக்கிறது. கண்ணதாசன் தென்றல் இதழில் எழுதிய கட்டுரைகள் நூலாக வெளிவந்துள்ளன

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:27 IST