under review

செருக்களவஞ்சி

From Tamil Wiki
Revision as of 16:07, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செருக்களவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். செருக்களத்தில் (போர்க்களத்தில்) நிகழும் கொடூரங்களை ஆசிரியப்பாவினாலும், வஞ்சிப்பாவினாலும் கூறும்படி அமைந்தது செருக்களவஞ்சி.

ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
தூசிப் படையைச் சொல்வது தானை
மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;
செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869

போரில் அறுபட்டு வீழ்ந்த மனிதர், குதிரைகள், யானைகள் போன்றவற்றின் உடலங்களிலிருந்து, தசையையும், இரத்தத்தையும், பேய், பிசாசுகளும், கழுகு, நாய், காகம் முதலானவையும் எமது எமது என்று தின்று ஆரவாரம் செய்யும். பூதங்கள் இசைபாடி ஆடிக் களிக்கும் என்று செருக்களவஞ்சியில் கூறப்படுவன பற்றிப் பிரபந்த தீபிகை விளக்குகிறது.

போர்க் களத்தில் இறந்த குதிரை, யானை போன்றவற்றின் உடலையும், மனிதர்களின் உடலையும், நாய், பேய், பிசாசு, காகம், கழுகு ஆகியன உண்டுகளித்துப் பாடிய சிறப்பைப் பாடுவது செருக்கள வஞ்சி என்று முத்துவீரியம் குறிப்பிடுகிறது. பரணி என்ற சிற்றிலக்கிய வகைமையும் இத்தன்மையதே,

போர்க்களத் திறந்த புரவி நால்வாய்
மக்களுடலையும் வாயசங் கழுகு
பேய்நாய் பசாசம் பிடுங்கிப் பருகிக்
களித்துப் பாடிய சிறப்பைக் காட்டல்
செருக்கள வஞ்சியாஞ் செப்புங் காலே.

உசாத்துணை

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:15 IST