under review

பாண்டிக் கோவை

From Tamil Wiki
Revision as of 16:03, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாண்டிக் கோவை (பொ.யு. 8-ம் நூற்றாண்டு) மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் நெடுமாறனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட கோவை என்னும் சிற்றிலக்கியம். தமிழின் முதல் கோவை நூல். இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. இறையனார் களவியல் உரையில் பாண்டிக் கோவையின் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

ஆசிரியர்

பாண்டிக் கோவையை இயற்றியவர் பெயர் அறியவரவில்லை.

நூல் அமைப்பு

பாண்டிக்கோவை கோவை என்னும் சிற்றிலக்கிய வகைமையச் சார்ந்தது. தலைவன் தலைவி இருவரின் களவு, கற்பு வாழ்க்கையை ஒரு கதை போல் படிப்படியாகக் காட்டி ஒரே வகையான செய்யுள்களால் தொடர்ந்து பாடி அமைக்கும் சிற்றிலக்கியம் கோவை (அகப்பொருட்கோவை, ஐந்திணைக் கோவை என்ற பெயர்களும் உண்டு).

பாண்டிக்கோவை 325 பாடல்களால் ஆனது. அரிகேசரி என்னும் பாண்டியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு களவொழுக்கம் பற்றி 239 பாடல்களும், கற்பொழுக்கம் பற்றி 86 பாடல்களும் கொண்டது. பிற்சேர்க்கையாகச் சில பாடல்கள் காணப்படுகின்றன. திருக்குருருைகப் பெருமாள் கவிராயர் இயற்றிய 'மாறன் அகப்பொருள்' எனும் அகப்பொருள் நூலின் உரையில் மேற்கூறியவற்றில் இல்லாத பாண்டிக்கோவைப் பாடல்கள் சில இடம்பெற்றன.

இந்நூல் அரிகேசரி என்னும் பாண்டியனின் புகழைக்கூறவே இயற்றப்பட்டாலும் இறையனார் அகப்பொருள் நூலின் துறைகளை விளக்கவும் இயற்றப்பட்டது எனக் கருத இடமுள்ளது. இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்பட்ட ஒவ்வொரு துறைக்கும் மேற்கோள் பாடல் பாடப்பட்டுள்ளது.

சேர, சோழ, பாண்டியநாட்டின் ஊர்கள், மன்னர்கள், தலைநகர், போர்க்களங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் நூலில் இடம்பெறுகின்றன.

பாண்டியனின் பெயர்களாகக் குறிப்பிடப்படுவன

அரிசேகரன், அதிசயன், இரணாந்தகன், இரேணாதயன், உசிதன், சத்ருதுரந்தரன், சிலம்பன், செம்பியன்-மாறன், செழியன், துறைவன், தென்னவன், நேரியன், பஞ்சவன், பராங்குசன், பூழியன், பூழியன்-மாறன், மாறன், மீனவன், வேராதயன், வழுதி, வானவன், வானவன்-மாறன், விசயசரிதன், விசாரிதன் பற்சொல் பண்புப் பெயர்கள் உரும்ஏந்தியேகோன், கங்கைமணாளன், கலிமதனன், கன்னிப்பெருமான், சந்திரகுலத்தோன், தமிழ்நர் பெருமான், தீந்தமிழ்வேந்தன், முத்தக்குடைமன்னன், வெண்குடைவேந்தன்

பாண்டியன்வென்ற போர்க்களங்கள்

அளநாடு, ஆற்றுக்குடி, இருஞ்சிைற, கைடயல், களத்தூர், குளந்தை, கோட்டாறு, கோளமநாடு, சங்கமங்கை, செந்நிலம், சேவூர், தொண்டி, நட்டாறு, நறையாறு, நெடுங்களம், நெல்வேலி, பறந்தைலை, பாழி, புலிப்பை, பூலந்தை, மணற்றிமங்கை, மேற்கரை, வல்லத்து, வாட்டாறு, விழிஞம், வெண்டரை, வெண்மாத்து, வேணாடு

ஏனய இடப்பெயர்கள்

அத்தமைல, உறந்தை, காவிநாடு, கூடல், கொங்கநாடு, கோல்லி, தொண்டி, நேமலை, பறந்தைலக்கோடி, புகார், புனல்நாடு, பொதியில், மந்தாரம், மலயம், மாந்தை முசிறி, வஞ்சி, விழிஞத்துக்கடல்கோடி (தனுஷ்கோடி போன்ற கடல் முனை)

இதர நிகழ்ச்சிகள்

பாண்டியர்கெண்டை இமயமலைமேல் பொறித்தது, மதுரை விழா, வேம்பொடு போந்தை(பனை) அணிதல், புலியும் கயலும்செம்பொன் மலைமிசை இருத்தல்

பாடல் நடை

களவு

பா அடியாைனப் பராங்குசன் பாழிப் பைக தணித்த
தூ வடிேவல் மன்னன் கன்னித் துைற சுரும்பார் குவைளப்
பூ அடி வாள் நெடும் கண் இைமத்தன பூமி தன் மேல்
சவடி தேய்வ கண்டேன்டன் தய்வம் அல்ல அளிச்சேயிழையே 3

கற்பு

முளி தரு வேல் நல் கண் கானவர் ஆர்ப்ப முகில் கணங்கள்
தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி தன்மேல்
அளி தரு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன
ஒளி தரு வாள் நுதலாள் நைய இவ்வாறு ஒழுகுவேத 321

உசாத்துணை

பாண்டிக் கோவை, மதுரைத் திட்டம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:23:36 IST