under review

வதரியாற்றுப்படை

From Tamil Wiki
Revision as of 13:56, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வதரியாற்றுப்படை (1967) வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் எழுதிய சிற்றிலக்கியம். பவானி கூடுதுறையில் கோயில்கொண்டுள்ள வேதவல்லி சமேத பதரிநாதர் மேல் பாடப்பட்ட ஆற்றுப்படை நூல்.

எழுத்து, வெளியீடு

கூகலூர் கே. சுப்பண கவுண்டர் என்னும் நிலவுடைமையாளர் பவானி முக்கூடல் கோவிலில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்துபோது கோரிக்கை விடுத்ததன் பேரில் வித்துவான் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் இந்நூலைப் பாடினார். இதன் தற்சிறப்புப் பாயிரத்தால் ஜூலை 30, 1967 அன்று வதரியாற்றுப்படை பாடப்பட்டது எனத் தெரிகிறது. இந்நூலை ஜனவரி 1, 2022-ல் அறிஞர் நா. கணேசன் பதிப்பித்தார். திருப்பூர் புலவர் சுந்தர கணேசன் உதவினார்.இதன் கைப்பிரதி நீதிபதி ஆர்.செங்கோட்டுவேலன் அவர்களால் அளிக்கப்பட்டது.

உள்ளடக்கம்

வதரியாற்றுப்படை பவானிகூடல் மறைக்கொடி (வேதாம்பிகை) சமேத வதரிமூலலிங்கர் (திருநணா உடையார்) மீதான ஆற்றுப்படை இலக்கியம் . பத்ரி என்றால் நணா மரம், அல்லது இலந்தை மரம். பவானியில் கோவில்கொண்ட இறைவனின் பெயர் வதரிநாதர். அவர்மேல் இந்நூல் பாடப்பட்டுள்ளது.

இலக்கிய இடம்

வதரியாற்றுப்படை தமிழில் மிகப்பிற்காலத்தில் உருவான சிற்றிலக்கியங்களில் ஒன்று.

உசாத்துணை

வதரியாற்றுப்படை - நா. கணேசன்




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Aug-2023, 09:09:48 IST