under review

ஜகூன்

From Tamil Wiki
Revision as of 12:03, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நன்றி: Mohd Zaidi Mohd Abidin

ஜகூன் பழங்குடியினர் (Jakun) மலெசியப் பழங்குடியினர். தீபகற்ப மலேசியாவின் மலாயு ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜகூன் பழங்குடியினரை பிடுஆண்டா (Biduanda), மந்தெரா (Mantera), ஓராங் லாவோட் (Orang Laut), ஓராங் கானாக் (Orang Kanak), ஓராங் ஊலு (Orang Ulu) என்று நான்கு வகைகளாகப் பிரிப்பர்.

வாழிடம்

ஜகூன் பழங்குடியினர் பஹாங் காடுகளில், ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் வசிக்கின்றனர்.

மொழி

ஜகூன் பழங்குடியினரின் மொழி Archaic மலாய் ஆகும். ஜகூன் பழங்குடியினர் மலாய் மொழியிலும் பேசுவர்.

பின்னனி

ஜகூன் பழங்குடியினர் யுனான் (தெற்கு சீனம்) பகுதியிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். சுமத்ரா படைகள் மலாயாவின் கரையோரங்களை ஆக்கிரமித்தனர். சுமத்ரா படைகளுடன் ஜக்கூன் பழங்குடியினர் நல்லுறவைக் கொண்டவர்கள்.

தொழில்

ஜகூன் பழங்குடியினர் ஓலையிலும் மூங்கிலிலும் தங்கள் வீடுகளைக் கட்டுவர். காடுகளில் இருக்கும் கனி வளங்களைச் சேகரித்து சாப்பிடுவர். வேட்டையாடுவதற்குச் சும்பிட் (Sumpit) எனப்படும் விஷ அம்பைப் பயன்படுத்துவர்.

நம்பிக்கைகள்

ஜகூன் பழங்குடியினர் ஆன்மவாதத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் அனைத்து பொருட்களுக்கும் ஆன்மா உள்ளதென நம்புகின்றனர். மாய மந்திர சக்தியால் ஒர் ஆன்மா, ஒருவரை விட்டு அல்லது ஒரு பொருளை விட்டு விலகலாம். விலகிய ஆன்மா மனிதர்களை ஆட்டிப் படைக்கலாம் என்றும் நம்புகின்றனர். ஜகூன் பழங்குடியினரில் வலது கைப் பக்கம் உள்ளவர்கள் மரணித்த பின் தங்களுக்கான தனித்த ஓர் உலகில் வாழ்வார்கள். ஆனால், இடது கை பழக்கமிருப்பவர் மரணித்த பின் பூமியிலே உலவுவர் என்று நம்புகின்றனர். ஜகூன் பழங்குடியினரிடையே மதம், பேரண்டத்தை வணங்குவதற்கும், மூதாதையர் வழிபாட்டுக்கும், சடங்குகளை நிகழ்த்தும் ஆவிகளுக்கும் மையப்புள்ளியாக உள்ளது.

சடங்கு

திருமணம்
நாசி கெபால் [நன்றி: Mohamad Suhaizi Bin Suhaimi

இளம் தெமுவான் ஆடவர் தனது திருமண விருப்பத்தை வீட்டில் சொல்வார். அவரின் தந்தையாரும் தொக் பாத்தினும் பெண் வீட்டாரிடம் பெண் கேட்பர். இரு குடும்பங்களின் பெற்றோர்கள் சம்மதித்தால் நிச்சய நாள் தீர்மானிக்கப்படும். நிச்சயதார்த்தத்தன்று மணமகளுக்கு மணமகன் மோதிரம், உடை, அலங்காரப் பொருட்களைத் தருவார். மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொள்வர். திருமணத்திற்கு முதல் நாள் மருதாணியிடும் நாள். அன்று மணமகளுக்கு மருதாணியிடப்படும். மருதாணியிடும் நாளில் சாப்பிட வெற்றிலை பாக்கும், புகையிலை சுருட்டும் தரப்படும். திருமண நாளன்று, மணமகள் ‘தந்ஜாக்’ (Tanjak) மற்றும் ‘செலெம்பாங்’ (Selempang) அணிந்திருப்பார். தந்ஜாகும் செலெம்பாங்கும் தென்னை ஓலையில் பின்னப்படும். இந்தப் பின்னலை ‘காகி லிபான்’ என்பர். மணமக்கள், ஒருவருக்கொருவர், பொரித்த கோழி, ‘நாசி கெபால்’ , வெற்றிலை பாக்கு ஊட்டிவிடுவர். மணமக்களுக்கு புகையிலை சுருட்டு தருப்படும். மணமக்கள் சுருட்டு தீரும் வரை புகைபிடிக்க வேண்டும். சுருட்டின் முடிவு வரை புகைபிடிப்பது, மணமக்கள் ஒன்றிணைந்து அவர்களின் வாழ்கை இறுதி வரை செல்லுவதற்கான குறியீடாகும். மணமகள் மணமகனுக்கு வெந்த மரவள்ளிக்கிழங்கை ஊட்டினால் ஜோடிகளுக்கு ஜகூன் முறைப்படி திருமணம் முடிந்தது எனப் பொருள்.

இறப்பு

ஜகூன் பழங்குடியில் இறந்தவரின் நினைவேந்தலுக்காக நான்கு விருந்துகள் நடத்தப்படும். முதலாம் விருந்து நெகாக் (Negak), இறந்த மூன்றாம் நாளில் நடத்தப்படும் விருந்து. இரண்டாம் .விருந்து நுஜோ (Nujuh) என அழைக்கப்படுகிறது, இறந்த ஏழாம் நாள் நடத்தப்படும் விருந்து. மூன்றாம் விருந்து என அழைக்கப்படுகிறது. மெராத்தோஸ் (Meratus) என்பது இறந்த நூறாம் நாள் விருந்து ஆகும்.

பார்க்க தீபகற்ப மலேசியாவில் பழங்குடியினர்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:23 IST