under review

கே. கணேஷ்ராம்

From Tamil Wiki
Revision as of 12:00, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: K. Ganeshram. ‎

கே. கணேஷ்ராம்
கே.கணேஷ்ராம்

கே. கணேஷ்ராம் (பிறப்பு: ஜனவரி 19, 1981) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

பிறப்பு, கல்வி

கே. கணேஷ்ராம் கடலூரில் கிருஷ்ணன், ராஜராஜேஸ்வரி இணையருக்கு ஜனவரி 19, 1981-ல் பிறந்தார். கடலூர், புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் முதுகலைப்பட்டம் பெற்றார். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஒப்பிலக்கியம் (Comparative Literature); அமெரிக்க இலக்கியம் (American Literature); பின் நவீனத்துவ புனைவு (Post Modern Fiction) போன்றவற்றை ஆய்வுத்தலைப்புகளாக எடுத்துக் கொண்டார்.

தனி வாழ்க்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் உதவி பேராசியராக உள்ளார். மனைவி சி. புவனேஸ்வரி. கடலூர் அரசு செவிலியர் கல்லூரி விரிவுரையாளர். மகள்கள் மதுர ஸ்ரீ, மிதுனா ஸ்ரீ.

இலக்கிய வாழ்க்கை

கே. கணேஷ்ராமின் முதல் கதை ’கோகுலம்’ 1994-ல் வெளியானது. பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட மணிக்கதைகள் தொகுப்பில் பரிசு பெற்ற கதை வெளியானது. 2009-ல் முதல் மொழிப்பெயர்ப்பு கல்குதிரை இதழில் வெளியானது. தொடர்ந்து புது எழுத்து, நீட்சி, பவளக் கொடி, அடவி, கனலி , புரவி, சிறு கதை, தனிமை வெளி ஆகிய சிறு பத்திரிகைகளில் கே. கணேஷ்ராமின் மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.

விருதுகள்

  • 1995-ல் ’கோகுலம்’ சிறுகதை அழ.வள்ளியப்பா நினைவு சிறுகதைப் போட்டி முதல் பரிசு பெற்றது.
  • வாசகசாலை விருது 2019 (சுழலும் சக்கரங்கள்)
  • அனந்த விகடன் விருது 2019 (சுழலும் சக்கரங்கள்)

நூல்கள்

மொழிபெயர்ப்புகள்
  • காஃப்காவின் நுண் மொழிகள் (2020)
  • பத்து இரவுகளின் கனவுகள்(2021)
  • சுழலும் சக்கரங்கள் (2019)
  • மூன்று இரத்தத் துளிகள் (2022 செப்டெம்பர் வெளியீடு)

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Sep-2022, 16:08:57 IST