under review

தேசசேவகன் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 14:59, 4 May 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தேசசேவகன் (1922), புதுச்சேரியிலிருந்து வெளிவந்த இதழ். பழனி சின்னைய ரத்தினசாமி நாயுடு என்னும் சைகோன் சின்னையாவால் வெளியிடப்பட்டது. தேச நலன் குறித்த பல கட்டுரைகள் இவ்விதழில் வெளியாகின. பாரதிதாசனின் பல தேசபக்த கட்டுரைகள், கவிதைகள் இவ்விதழில் வெளிவந்தன.

பிரசுரம், வெளியீடு

சைகோன் சின்னையா என்று அழைக்கப்படும் பழனி சின்னைய ரத்தினசாமி நாயுடுவால், நவம்பர் 07, 1922-ல் தொடங்கப்பட்ட இதழ் தேசசேவகன். 67, ஆனந்தரங்கம்பிள்ளை வீதி என்ற முகவரியில் இருந்து இவ்விதழ் வெளியானது. இதன் விலை, சந்தா போன்ற விவரங்களை அறிய இயலவில்லை.

உள்ளடக்கம்

தேசவேகன் இதழின் முகப்பில், ’தேசசேவகன்’ என்று தமிழிலும் அதன்கீழே ’LE PATRIOTE’ என்று பிரெஞ்சிலும் பெயர் குறிக்கப்பட்டது.  'நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை' என்ற பழமொழி இவ்விதழின் முகப்பில் இடம்பெற்றது. 'பிரதி மங்கல வாரமும் வெளிவரும்' என்ற குறிப்பும் இடம்பெற்றது. தேச நலன் குறித்த பல கட்டுரைகள் இவ்விதழில் வெளியாகின. தேசசேவகன் இதழில், பாரதிதாசன், பாரததேவியின் பெருமையைக் குறித்தும், சுதந்திரத்தின் அமரத்தன்மை குறித்தும் பல பாடல்களை எழுதினார். ரா. கனகலிங்கம், வாசுதேவசர்மா, பி.வி.ஆர். உள்ளிட்ட பலர் இவ்விதழுக்குப் பங்களித்தனர்.

இதழ் நிறுத்தம்

தேசசேவகன் இதழ் எப்போது நின்றுபோனது என்ற தகவல்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

தேச நலன் சார்ந்து புதுச்சேரியிலிருந்து வெளிவந்த இந்தியா, விஜயா, கர்மயோகி போன்ற இதழ்களுள் குறிப்பிடத்தகுந்த ஓர் இதழாக தேசசேவகன் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • தமிழில் இதழியல், இ.சுந்தரமூர்த்தி, மா.ரா. அரசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2011

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.