under review

நவசக்தி

From Tamil Wiki
Revision as of 12:34, 2 April 2024 by Jeyamohan (talk | contribs)

To read the article in English: Navasakthi. ‎

நவசக்தி
நவசக்தி

நவசக்தி (1920) திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தொடங்கி நடத்திய மாத இதழ். அரசியல், தமிழாய்வு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்தது.

1960-ல் காங்கிரஸ் கட்சிக்காக நவசக்தி இதழை டி.எஸ்.சொக்கலிங்கம் மீண்டும் தொடங்கினார். அதுவும் நீடிக்கவில்லை. பின்னர் மீண்டும் அவ்விதழ் சிலகாலம் வெளிவந்தது.

வெளியீடு

தேசபக்தன்’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் சென்னை பக்கிங்ஹாம் கர்நாட்டிக் மில் தொழிலாளர்கள் திரட்டித்தந்த நிதியாதரவால் சாது அச்சகம் என்னும் அமைப்பை தொடங்கி அதில் இருந்து நவசக்தி என்னும் இதழை 22 அக்டோபர் 1920-ம் நாள் தொடங்கினார். அவ்விதழை அவர் இருபது ஆண்டுகள் நடத்தினார். சிலம்பு 13- பரல் 11- என்பதைத் தமிழ் எண்களால் குறித்தது

நவசக்தியில் கல்கி கிருஷ்ணமூர்த்தி துணையாசிரியராகப் பணியாற்றினார். ஈ.வெ.ராமசாமி பெரியார் அளித்த நிதியுதவியால் நவசக்தி வாரம் மும்முறை இதழாகச் சிலகாலம் வெளிவந்தது.

ஜனவரி 1941 ல் நவசக்தி பொறுப்பில் இருந்து திரு.வி.க விலகிக்கொண்டார். அப்பொறுப்பு அதன் துணையாசிரியராக இருந்த சக்திதாச சுப்ரமணியத்திடம் அளிக்கப்பட்டது.

உள்ளடக்கம்

நவசக்தி பெரும்பாலும் திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரின் கருத்துக்களையும் நூல்குறிப்புகளையும் தாங்கி வெளிவந்தது. தேசிய விடுதலைப்போராட்டம், காந்தியக் கருத்துக்களை வெளியிட்டது. கல்கி கிருஷ்ணமூர்த்தி இவ்விதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்

மறுவெளியீடு

நவசக்தி என்ற பெயரில் பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் இதழ் வெளிவந்தது (பார்க்க நவசக்தி (காங்கிரஸ்) )

உசாத்துணை


✅Finalised Page