கும்பகோணம் தாதக்கிருஷ்ணன்
From Tamil Wiki
கும்பகோணம் தாதக்கிருஷ்ணன் (கிருஷ்ணன்) (1879 - 1935) ஒரு தவில்கலைஞர்.
இளமை, கல்வி
தாஸரி அல்லது தாதர் என்றழைக்கப்படும் குடும்பம் ஒன்றில் 1879 ஆம் ஆண்டு கிருஷ்ணன் பிறந்தார்.
கிருஷ்ணன் கும்பகோணம் சக்ரபாணித் தவில்காரரிடம் ஒன்பதாண்டுகள் தவில் பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
கும்பகோணம் தாதக்கிருஷ்ணனின் பெற்றோர், மனைவி குறித்த தகவல்கள் தெரியவில்லை. கும்பகோணம் தாதக்கிருஷ்ணனுக்கு ஒரு மகனும் மகளும் இருந்தனர்.
இசைப்பணி
கும்பகோணம் தாதக்கிருஷ்ணனின் ஒரே மாணவர் கும்பகோணம் தங்கவேல் பிள்ளை.
உடன் வாசித்த கலைஞர்கள்
கும்பகோணம் தாதக்கிருஷ்ணன் கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- கீரனூர் சகோதரர்கள்
- நாகூர் சுப்பய்யா பிள்ளை
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- திருவீழிமிழலை சகோதரர்கள்
- பந்தணைநல்லூர் சுப்பிரமணிய பிள்ளை
- திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை
மறைவு
கும்பகோணம் தாதக்கிருஷ்ணன் 1935ஆம் ஆண்டு காலமானார்.