ஜலதீபம்

From Tamil Wiki

ஜலதீபம் ( ) சாண்டில்யன் எழுதிய சரித்திர சாகச நாவல். மராட்டியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நிகழ்ந்த போரின் பின்னணியில் இந்நாவல் அமைந்துள்ளது

எழுத்து,வெளியீடு

சாண்டில்யன் இந்நாவலை குமுதம் வார இதழில் தொடராக வெளியிட்டார். பின்னர் வானதி பதிப்பகத்தால் நூல்வடிவாகியது.

வரலாற்றுப்பின்னணி

இந்நாவல் மகாராஷ்டிரத்தில் சிவாஜி நிறுவிய மராட்டிய அரசின் இறுதிக்காலத்தில் நிகழ்கிறது.சிவாஜி உருவாக்கிய மராட்டியப்பேரரசு அவருக்குப்பின் அவர் மகன் சாம்பாஜி காலத்தில் சிதைகிறது. அவருக்குப்பின் அதிகாரப்போட்டி நிகழ்கிறது. ஷாஹூவுக்கு தாராபாய் ஆதரவு பெற்ற சிவாஜியும் ஆண்டுவருகிரார்கள். தஞ்சையில் வளர்ந்து வரும் மூன்றாவது மகன் வீரன் ஒருவனால் கடத்தப்பட அவனை கண்டுபிடிதக்க இக்கதையின் நாயகன் தஞ்சையில் இருந்து புறப்படுகிறான் }

கதையின் நாயகர்களில் ஒருவரான கன்னோஜி ஆங்கரே ஜல்ஜீரா என்று அழைக்கப்பட்ட தீவில் இருந்துகொண்டு மராட்டிய கடற்பகுதிமேல் ஆதிக்கம் செலுத்திவந்தவர். ஆகஸ்ர் 1669 ல் பிறந்து 4 ஜூலை 1729ல் மறைந்த கன்னோஜி ஆங்கரே மராட்டிய கடற்கரையில் இறுதிவரை வெல்லமுடியாத கடல்வீரராகத் திகழ்ந்தவர்.ஆகவே ஒரு மராட்டிய வீரநாயகராக கருதப்படுகிறார்.

கதைச்சுருக்கம்

கதைநாயகன் இதயச்சந்திரன் ஒரு கற்பனை கதாபாத்திரம். (இதயச்சந்திரன் என்ற பெயர் தமிழில் அன்றைய சூழலில் இல்லாத ஒன்று) தஞ்சையில் மராட்டிய மன்னர் ராஜாராமின் ரகசிய மனைவிக்கு பிறந்த வாரிசு ஒருவன் கடத்தப்படுகிறான். அவனை கண்டுபிடித்து தரும்படி கோரி அவனை மராட்டிய நிலத்துக்கு அவள் அனுப்புகிறாள். அங்கே வரும் வழியில் கடல்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நீந்தி கரையணைந்து காயமுற்று கிடக்கும் இதயச்சந்திரனை மராட்டியக் கடல்கொள்ளையரும் படைத்தலைவருமான கன்னோஜி ஆங்கரேயின் மகள் மஞ்சு காப்பாற்றுகிறாள். மஞ்சுவிடம் காதல்கொள்ளும் இதயச்சந்திரன் கன்னோஜியின் படையில் சேர்ந்து தேர்ந்த கடல்வீரனாக ஆகிறான். அவனுடைய கப்பலின் பெயர்தான் ஜலதீபம்

கடல்வீரனாக இதயச்சந்திரனின் வாழ்வில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். பானுதேவி என்னும் மராட்டிய இளவரசி, காதரைன் என்னும் வெள்ளைக்காரப் பெண், எமிலி என்னும் மருத்துச்சி. பல கடல்போர்களில் வெள்ளையர்களை இதயச்சந்திரன் தோற்கடிக்கிறான். பேஷ்வா பாலாஜி விஸ்வநாத், பேஷ்வா பிங்களே ஆகியோர் கதையில் வருகிறார்கள். இறுதியில் தஞ்சை ரகசிய ராணி தோன்றி இதயச்சந்திரன் தன் மகனை தேடவேண்டாம் என்று சொல்கிறாள், இன்னொரு அதிகாரப்போட்டியை அவள் விரும்பவில்லை என்கிறாள். இதயச்சந்திரன் ஊர்திரும்புகிறான்.

உசாத்துணை