being created

மு. சிவலிங்கம்

From Tamil Wiki
மு. சிவலிங்கம் (நன்றி- மு. இளங்கோவன்)

மு. சிவலிங்கம் (பிறப்பு: செப்டம்பர் 12, 1951) கணினித்தமிழ் அறிஞர், தொழில்நுட்ப வல்லுநர்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. சிவலிங்கம் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் வட்டம், கூவக்காப்பட்டி என்னும் ஊரில் முனியப்பன், சின்னக் கண்ணம்மாள் இணையருக்கு செப்டம்பர் 12, 1951-இல் பிறந்தார். பெற்றோருக்கு இவர் பன்னிரண்டாவது பிள்ளை. வெள்ளைய கவுண்டனூர் தொடக்கப்பள்ளியிலும், கூவக்கப்பாட்டிப் பள்ளியிலும், வேடசந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வி பயின்றவர். சிவகாசி அய்யநாடார் கல்லூரியில் கணிதப்பாடத்தைப் பட்டடப் படிப்பிற்காகப் பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்திற்காகக் கணிதத்தைப் பயின்றவர். கணிதம், தமிழ், கணினிப் பயன்பாடு, தொழிலாளர் சட்டம், மனித வள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

தமிழ் கணிணிக்குச் செய்த பங்களிப்புகள்

தமிழக அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் இருந்து கணினி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்குப் பணியாற்றியவர்.

இலக்கிய வாழ்க்கை

மு. சிவலிங்கம் மரபு கவிதைகள் எழுதினார். சிற்றிதழ் நடத்தியவர். கவியரங்கேறியவர்.

விருதுகள்

மறைவு

மு. சிவலிங்கம் பிப்ரவரி 13, 2024-இல் சென்னை மாம்பலத்தில் உள்ள தம் இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.

நூல் பட்டியல்

  • ஐகியூ தேர்வுகள் எழுதுவது எப்படி?
  • டாஸ் கையேடு
  • உள்ளங்கைக்குள் உலகம்
  • டி’பேஸ் வழியாக சி-மொழி
  • கம்ப்யூட்டர் இயக்க முறைகள்
  • மின்னஞ்சல்
  • வருங்கால மொழி சி++
  • +1 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2
  • +2 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2
  • தகவல் தொழில்நுட்பம் – ஓர் அறிமுகம்
  • நெட்வொர்க் தொழில்நுட்பம்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.